தேய்பிறையான கிருஷ்ணபட்சம் முன்னோர் வழிபாட்டிற்கு உகந்தது. அதில் பாத்ரபதமாதம் என்னும் புரட்டாசியில் வரும் மகாளயபட்சம் மிகவும் சிறப்பானது.ஒரே குடும்பத்தில் பிறந்து, பணியின் காரணமாக பல ஊர்களில் வாழ்ந்தாலும், திருமணம், குலதெய்வ வழிபாடு போன்றவற்றில் எல்லோரும் ஒரே இடத்தில் கூடுவதுபோல, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முன்னோர்கள் ஒன்றாக வந்து தன் வாரிசுகளை வாழ்த்தும் காலமே மகாளயம். பிதுர்லோகத்தின் தலைவரான எமதர்மனின் அனுமதியோடு அவர்கள் பூலோகம் வந்து தங்குகின்றனர்.