நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, திருமணத்திற்குப் பின் தன் கணவர், குழந்தைகளுக்காகவே வாழ்ந்து மறைந்த சுமங்கலிப் பெண்களுக்கு பதிவிரதை என்று பெயர். இவர்கள் சுயநலம் என்பதே அறியாமல் தனக்கு ஏற்படும் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு குடும்பநலன் ஒன்றையே உயிராக மதித்து வாழ்ந்தவர்கள். இவர்களுக்காக மகாளய பட்சத்தில் ஒருநாள் ஒதுக்கப்பட்டுள்ளது.அதற்கு ‘அவிதவா நவமி’ என்று பெயர். இந்நாளில் இவர்களுக்கு சிராத்தம் செய்து, அன்னதானம், வஸ்திர தானம் செய்ய வேண்டும். இதனால், குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு தீர்க்க சுமங்கலிபாக்கியம் உண்டாகும் என்கிறதுதர்மசிந்து என்ற நுõல்.