திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2025 04:11
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது. குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பைரவர் யோகநிலையில் அருள்பாலிக்கிறார். அஷ்டபைரவத் தலங்களில் சிரசாக இத்தலம் பக்தர்களால் வழிபடப்படுகிறது. இங்கு அஷ்டமி தினங்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். இன்று மதியம் 12:00 மணிக்கு ரமேஷ் குருக்கள், பிரதோஷ குருக்களால் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மூலவர் யோகபைரவருக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சந்தனக்காப்பு அலங்காரத்தில் பைரவர் எழந்தருளி அலங்காரத் தீபாராதனை நடந்தது.