பதிவு செய்த நாள்
28
செப்
2018
12:09
திருப்பூர்;அய்யன் கோவிலில், பணியாளர்களுக்கு, பயோமெட்ரிக் பதிவேடுவசதி செய்துள்ளதை, ஆய்வுக்குழுவினர் பாராட்டினர்.மதுரை ஐகோர்ட் உத்தரவுப்படி, மாவட்ட நீதிபதிகள், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்ட நீதிபதி அல்லி தலைமையிலான குழுவினர், வாழைத் தோட்டத்து அய்யன் கோவிலில், ஆய்வு மேற்கொண்டனர். அர்ச்சனை சீட்டு, சிறப்பு தரிசன கட்டணம், குடிநீர் வசதி, கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகள் குறித்து ஆய்வு நடந்தது.
பக்தர்களுக்கு, தினமும் அன்னதானம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளதால், அன்னதான மண்டபம், சமையல் கூடம் ஆகிய பகுதிகளும் ஆய்வு செய்யப்பட்டன. கோவில் வளாகம் முறையாக பராமரிக்கப்படுவதை தொடர வேண்டுமென அறிவுறுத்திய குழுவினர், பக்தர்களுக்காக, ஆர்.ஓ., சுத்திகரிப்பு குடிநீர் வழங்குவதற்கு பாராட்டு தெரிவித்தனர். ஆய்வின் போது, உதவி கமிஷனர் மேனகா உட்பட மற்றும் கோவில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.