பதிவு செய்த நாள்
28
செப்
2018
12:09
அவிநாசி: உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில், அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவிலில், பக்தர்களிடையே, பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, துணிப்பை மற்றும் துண்டுபிரசுரம் வழங்கப்பட்டன. கோவில் வளாகத்தை சுற்றி, தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை வகித்தார்.
மாவட்ட சுற்றுலா அலுவலர் இளங்கோ, என்.எஸ்.எஸ்., பொறுப்பாசிரியர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். அதன்பின், பெரியாயிபாளையத்தில் உள்ள திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவ, மாணவியரிடையே பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டது.