Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வத்திராயிருப்பு வடக்காச்சியம்மன் ... குருப்பெயர்ச்சி: பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் கோபுரதீபம் குருப்பெயர்ச்சி: பட்டமங்கலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருபெயர்ச்சி: குரு பார்க்க கோடி நன்மை
எழுத்தின் அளவு:
குருபெயர்ச்சி: குரு பார்க்க கோடி நன்மை

பதிவு செய்த நாள்

04 அக்
2018
10:10

நவக்கிரகங்களில் பூரணசுப கிரகமான குருபகவான் துலாம் ராசியில் இருந்து இன்று இரவு 10:05 மணிக்கு விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி, தஞ்சாவூர் அருகே தென்குடித்திட்டை, மதுரை அருகே குருவித்துறை, சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில், திருச்சி அருகே உத்தமர் கோவில், சென்னை பாடி வலிதாயநாதர், திருவொற்றியூர் காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி, அகரம் குருகோயில், வேலுார் அருகே தக்கோலம், திருச்செந்துார் உள்ளிட்ட தலங்களிலும், சிவாலயங்களில் உள்ள தட்சிணா மூர்த்தி, நவக்கிரக சன்னதிகளிலும் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை, சிறப்பு யாகம், அபிேஷகம், ஆராதனை நடக்கும்.இந்த பெயர்ச்சியால் ரிஷபம், கடகம், துலாம், மகரம், மீனம் ராசியினருக்கு நற்பலனும், சிம்மம், விருச்சிகம், கும்பம் ராசியினருக்கு சுமாரான பலனும் உண்டாகும். மேஷம், மிதுனம், கன்னி, தனுசு ராசியினர் பரிகாரமாக குரு பகவான், தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

குரு ஸ்லோகம்: தேவனாம்ச ரிஷிணாம்சகுரும் காஞ்சன ஸந்நிபம்!
புத்தி பூதம் த்ரிலோகேசம்தம் நமாமி ப்ருகஸ்பதிம்!!

பொருள்: தேவர்கள், ஞானிகளுக்கு குருவாகத் திகழ்பவரே! பொன் போலபிரகாசிப்பவரே! ஞானமே வடிவானவரே! மூவுலகங்களுக்கும் தலைவனாக விளங்குபவரே! பிரகஸ்பதியே! உம்மை வணங்குகிறோம். இந்த ஸ்லோகத்தை பக்தியுடன் 12 முறை படித்தால் குருவருளால் குறையனைத்தும் தீரும். கோடிநன்மை சேரும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனி மாதம் திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சபரிமலை; நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை 11:30 மணிக்கு நவக்கிரக ... மேலும்
 
temple news
காரைக்குடி; சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar