பழநி:பழநியில் நேற்று (அக்., 7ல்) பெய்த மழையால் ரோப்கார் பக்தர்கள் பாதுகாப்பு கருதி சேவை நிறுத்தப்பட்டது. பழநி முருகன்கோயிலுக்கு சனி,ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். நேற்று (அக்., 7ல்) ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு வந்திருந்த பக்தர்கள், வின்ச், ரோப்கார் மூலம் மலைக்கோயில் செல்ல ஒருமணிநேரம் வரை காத்திருந்தனர். நேற்று மாலை மழை பெய்தபோது பக்தர்கள் பாதுகாப்பு கருதி ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. வின்ச், படிப்பாதை வழியாக மலைக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது.