பதிவு செய்த நாள்
08
அக்
2018
02:10
உடுமலை: உடுமலை, ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றனர்.புரட்டாசி சனிக்கிழமையான நேற்று முன்தினம்(அக்., 6ல்), மலைப்பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் குறித்து, போலீஸ் மற்றும் வனத்துறை சார்பில், பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டிருந்தது. வழி நெடுகிலும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
அதோடு, மலைக்கு மேல் செல்லும் பக்தர்கள், கீழே இறங்கும் பக்தர்கள் குறித்து, இரு வரிசை தடுப்புகள் அமைத்து, கணக்கெடுக்கப்பட்டது.வனப்பகுதியில் செல்லும் பக்தர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்கவும், சென்றவர்கள் திரும்பியதை உறுதி செய்யவும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
நேற்று முன்தினம் (அக்., 6ல்), 24 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையான் கோவிலுக்கு நடந்து வந்து, சுவாமி தரிசனம் செய்துள்ளனர். போலீசார் கூறுகையில், வனப்பகுதியில் கோவில் அமைந்துள்ளதால், வனத்திற்குள் செல்பவர்கள் திரும்ப வருவதை உறுதி செய்யும் வகையில், கல்லூரி மாணவர்களை கொண்டு கணக்கெடுக்கப்பட்டது, என்றனர்.