பதிவு செய்த நாள்
15
அக்
2018
01:10
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த, சிந்தகம்பள்ளியில், பழமையான பெருமாள் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம், மூன்றாவது சனிக்கிழமையன்று, ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து கொண்டு வரப்பட்ட உற்சவமூர்த்தி ஊர்வலம் நடப்பது வழக்கம். நேற்று, பர்கூர் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், வெங்கடேச பெருமாள் சுவாமி தேர் பவனியை துவக்கி வைத்தார். விநாயகர் கோவில், முத்துமாரியம்மன் கோவில்களுக்கு சென்று, அங்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின், அண்ணா நகர், சிந்தகம் பள்ளி, கெம்பிநாயனப்பள்ளி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக தேர் சென்றது.