மயிலம்: மயிலம் சுப்பரமணியர் சுவாமி கோயிலில் ஐப்பசி மாத கிருத்திகை விழா நடந்தது. மயிலம் சுப்பரமணியர் சுவாமி கோயில் ஐப்பசி மாத கிருத்திகையை முன்னிட்டு நேற்று (அக்., 26ல்) காலை 6:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.
பகல் 11:00 மணிக்கு கோயில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிகளுக்கு பால், சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களினால் அபிஷேகம் நடந்தது.
மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. இரவு 7:30 மணிக்கு மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பரமணியர் சுவாமி வெள்ளி தேரில் மலை வலம் வந்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.