Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ண ஜென்மாஷ்டமி முக்கிய ...
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 6. கிருஷ்ண ஜென்மாஷ்டமி பூஜை
கிருஷ்ண ஜென்மாஷ்டமி விரத மஹிமை
எழுத்தின் அளவு:
கிருஷ்ண ஜென்மாஷ்டமி விரத மஹிமை

பதிவு செய்த நாள்

31 அக்
2018
15:35

கிருஷ்ணாவதாரம் திருமாலின் ஒன்பதாவது அவதாரமாகும். ராமாவதாரத்தில் அவரால் விடப்பட்ட சில அரும்பெரும் செயல்களை, கிருஷ்ணாவதாரத்தில் திருமால் உபதேச மொழியாக எடுத்துரைத்தார். 125 ஆண்டுகளே இப்பூவுலகில் வாழ்ந்திருந்தாலும், அவர் செய்த அருட் செயல்கள் கணக்கில் அடங்காதவைகள். பிறக்கும் பொழுதே, தான் திருமாலின் அவதாரம் என்பதை வெளிக்காட்டினார். உலகில் மலிந்து கிடந்த தீயச்செயல்களை மாய்த்து, நன்னெறிகளைப் பரப்பினார். அதேபோல் தீயவர்களை ஒழித்து, நல்லவர்களைக் காத்தருளினார்.

பூமாதேவியும், “தீயவர்களின் செயலால், அச்சுமையைத் தாங்காமல், நீரில் மூழ்கும் நிலையில் உள்ள என்னைக் காக்க வேண்டும் ” என்று பிரம்மதேவனிடம் முறையிட்டதன் பலனாகவும், இவ்வவதாரம் எடுக்க வேண்டியதாயிற்று.

முன்பு தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போர் நடந்தது. அந்தப்போரில் திருமாலின் உதவியால் தேவர்கள் வெற்றி பெற்றனர். அசுரர்கள் கொல்லப்பட்டனர். திருமாலின் திருக்கரத்தால் கொல்லப்பட்ட பல அசுரர்கள் மோக்ஷம் அடைந்தார்கள். காலநேமி போன்ற சில அரசர்கள் மிஞ்சிய கர்மத்தால், பூமியில் கம்சன் போன்றவர்களாகப் பிறந்தனர். அந்த அசுரர்களின் சுமை தாங்க முடியாமல் பூமாதேவி, பிரும்ம தேவனிடம் முறையிட்டதை, முன்பே தேவர்களும் கூறியிருந்தார்கள். அதற்கு பிரம்மதேவனும், “பூமாதேவியின் முறையீட்டை அறிவேன், தேவர்களையும், பூமாதேவியையும் காப்பதற்கு திருமாலே தகுதியுள்ளவர். ஆதலால் நாம் எல்லோரும் பாற்கடலுக்குச்சென்று, நாராயணனை வணங்கி முறையிடுவோம் ” என்றார். அதன்படி எல்லோரும் முறையிட்டு சென்று முறையிட்டனர். அசுரர்கள் மனிதப் பிறவிகள் எடுத்து, தேவர்களுக்கும், மூவுலகத்தாருக்கும் துன்பம் இழைக்கிறார்கள். அதற்குச் செய்ய வேண்டியது எதுவோ அதனை நியமித்து அருள் செய்ய வேண்டும் ” என்று பிரம்மா பிரார்த்தித்தார். திருமாலும் , “பயத்தை அளிக்கும், கம்சன் போன்ற அசுரர்களால் பூமிக்கும் தேவர்களுக்கும் ஏற்பட்ட துயரத்தைப் போக்கி அவர்களை அழிக்க, நான் யாதவ குலத்தில் முழு உருவத்துடன் அவதரிக்கிறேன். தேவர்களும், தேவப்பெண்களுக்கும் ஓர் அம்சத்துடன் என்னைப் பூஜிப்பதற்காகப் பிறக்கட்டும் என்றருளினார்.

இதைக்கேட்ட தேவர்கள் நிம்மதியுடன் தங்கள் இருப்பிடம் சென்றனர்.

எம்பெருமான் சகல லோகங்களையும் மோகிக்கத்தக்க யோகநித்திரை என்ற தமது மாயையைப் பார்த்து, “ஓ மாயா! பாதாளத்தில் இருக்கின்ற, இரண்யகசிபுவின் குமாரர்கள் அறுவரையும், தேவகியின் கர்ப்பத்தில் சேர்ப்பாயாக! அந்த அறுவரும் சம்ஹரிக்கப்பட்டவுடன்  எனது அம்சமாக இருக்கும் ஆதிசேஷன் தேவகியின் ஏழவாது கர்ப்பத்தில் பிறப்பான். வசுதேவனின் பத்தினியான ரோகிணி என்பவள் நந்தகோபனுடைய கோகுலத்தில் இருக்கிறாள். அவளுடைய வயிற்றில் இருக்கும் வாயுரூபமான, ஏழுமாதத்திய கர்ப்பத்தை கலைத்து விட்டு, தேவகியின் வயிற்றில் இருக்கும் சேஷ அம்சமான ஏழு மாத கர்ப்பத்தைக் கொண்டு போய் ரோகிணியின் கர்ப்பத்தில் சேர்ப்பாயாக. நான் என்னுடைய அம்சமாகிய சங்கு, சக்கரத்துடன் தேவகிக்குப் பிள்ளையாக பிறக்கப்போகிறேன். நீயும் நந்தகோபனுடைய மனைவியான யசோதைக்குப் பெண்ணாகப் பிறக்க வேண்டும். அவரவர் விரும்புகிற வரங்களை எல்லாம் அளிக்கும் உன்னை, மனிதர்கள் பலவகையாக ஆராதிப்பார்கள். பூவுலகில் உனக்கு கோயில்கள் தோன்றும், உன்னை, ஆரியை, துர்கை, வேத கர்ப்பை, பத்தரை, பாக்கியதை, பத்ரகாளி, விஜயா, வைஷ்ணவி, குமுதா, சண்டிகை, கிருஷ்ணை, மாதவி, கன்னிகா, மாயா, நாராயணீ, ஈசானை, சாரதை, அம்பிகை என்ற திருநாமங்களால் அழைப்பார்கள் என்றார். மேலும், இப்பொழுதுதான் சொன்ன காரியங்கள் எல்லாம் என் அருளால் அப்படியே முடியும் ” என்று நிச்சயமாகக் கூறியருளினார்.

மதுரா நகரத்தின் அரசனான வசுதேவர், தேவகியை மணந்து கொண்டார். மணம் முடிந்தபின், தேவகியையும், வசுதேவரையும் ஊர்வலமாக வீதியில் அழைத்துச் சென்றார்கள். கம்சன், தன் சகோதரியின் மீது அளவு கடந்த பாசமுள்ளவன், அன்பின் காரணமாக, தானே தேரை ஒட்டிச் சென்றான். அப்பொழுது ஆகாயத்திலிருந்து ஓர் அசரீரி கேட்டது. “கம்சா! அறிவில்லாதவனே! அளவு கடந்த பாசத்துடன் உன் தங்கையைத் தேரில் வைத்து மகிழ்ச்சியுடன், செல்கிறாயோ, அவளுடைய எட்டாவது பிள்ளை உன்னைக் கொல்லப் போகிறான்.” என்றது.

இதைக்கேட்ட கம்சன் தேரிலிருந்து கீழே குதித்து, இடுப்பிலிருந்த கத்தியை உருவி, தேவகியின் கூந்தலைப் பிடித்து இழுத்துத் தள்ளி அவளைக் கொல்ல முற்பட்டான். அருகிலிருந்த வசுதேவன், மைத்துனனான கம்சனை சமாதானப்படுத்தினான். அதை கம்சன் பொருட்படுத்தாமல் தேவகியைக் கொல்ல முற்பட்டான். வசுதேவரும், “நீ இந்த அபலையைக் கொல்ல வேண்டாம். இவள் வயிற்றில் பிறக்கும் பிள்ளைகளை உன் இஷ்டப்படி செய்து கொள் ” என்றார். அதற்கு இணங்கிய கம்சன், “அப்படியே ஆகட்டும் ” என்று ஒப்புக்கொண்டு, தேவகியைக் கொல்லாமல் விட்டான்.

வசுதேவரும், கம்சனுக்குக் கொடுத்த வாக்கின்படி, தேவகிக்குப் பிறந்த குழந்தைகள் ஒவ்வொன்றையும் கம்சனிடம் ஒப்படைத்தான். கம்சனும், அக்குழந்தைகளைத் தானே கொன்று, வெற்றி மமதையுடன் மகிழ்ந்திருந்தான். திருமாலின் சொல்படி மாயையும் பாதாளத்தில் இருக்கிற இரண்யகசிபுவின் குமாரர்கள் அறுவரையும், தேவகியின் கர்ப்பத்தில் சேர்த்ததில் கம்சனும், தேவகியின் ஆறு குழந்தைகளையும் கொன்று வெறி தீர்த்தான். தேவகியின் ஏழாவது கர்ப்பம், மாøயினால், ரோகிணியின் வயிற்றில் சேர்ந்து, திருமாலின் அம்சமாக இருக்கும் ஆதிசேஷன், பலராமனாகப் பிறந்தான்.

எட்டாவது கர்ப்பம் தேவகிக்கு என்றவுடன் பலத்த பாதுகாப்புகளுடன், எதிர்நோக்கி இருந்தான் கம்சன். நந்தகோபனுடைய மனைவி யசோதையும், நிறைமாத கர்ப்பிணி.

பிரம்மாதிதேவர்கள், கந்தர்வர்கள், நாரதர் முதலிய முனிவர்கள், தேவகியின் கர்ப்பத்தில் அமைந்திருக்கும் பரம புருஷனை மறைச்சொற்களால் வாழ்த்தி வணங்கினார்கள்.

கர்மத்தினால் விளையும் பிறவியற்ற பகவான் பிறக்க வேண்டும் எனக்கருதினார்கள். அது சமயம் ரோகிணி நட்சத்திரத்திற்கு மற்ற நட்சத்திரங்கள், சூரியன் போன்ற கிரகங்களும் அனுகூலமாயிருந்தன. திசைகள் தெளிந்து வானில் தாரைககள் அமைதியாயிருந்தன. பூமி முழுவதும் மங்களங்கள் நிறைந்திருந்தன. காற்று நறுமணத்துடன் மெல்ல வீசிற்று. இந்த சமயத்தில் பகவான் திருமால் பூமியில் அவதாரம் செய்தார். அப்பொழுது வானில் துந்துபி வாத்தியங்கள் முழங்கின. சித்த சாரணர்கள் துதித்தனர். அப்ஸரஸ்கள் நர்த்தனம் செய்தார்கள். முனிவர்களும் தேவதைகளும் பூ மழை பொழிந்தார்கள். மேகங்கள் மெல்ல மெல்ல கர்ஜித்தன. கிழக்கு திசையில் முழுமதி உதித்ததுபோல், இந்த சமயத்தில் தேவகியிடம் திருமால் தோன்றினார்.

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 6. கிருஷ்ண ஜென்மாஷ்டமி பூஜை »
முக்கிய குறிப்புகள்:செந்தாமரைக்கண்கள், நான்கு திருக்கரங்களிலும் சங்கு, சக்கரம், கதை முதலிய ஆயுதங்கள், ... மேலும்
 

தீபாராதனை அக்டோபர் 31,2018

தீபாராதனைவிக்னேச்’வராய நம:கற்பூர நீராஜனம் ஸந்தர்சயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு கற்பூர ஆரத்தி ... மேலும்
 

மந்த்ர புஷ்பம் அக்டோபர் 31,2018

மந்த்ர புஷ்பம்ஸ்ரீ க்ருஷ்ண ஸர்வலோகேச ’ நாநாபுஷ்பை: ஸுவாஸிதம் புஷ்பாஞ்ஜலிம் ப்ரதாஸ்யாமி ஸர்வலோக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar