Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிருஷ்ண ஜென்மாஷ்டமி விரத மஹிமை தீபாராதனை
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 6. கிருஷ்ண ஜென்மாஷ்டமி பூஜை
கிருஷ்ண ஜென்மாஷ்டமி முக்கிய குறிப்புகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2018
15:38

முக்கிய குறிப்புகள்:

செந்தாமரைக்கண்கள், நான்கு திருக்கரங்களிலும் சங்கு, சக்கரம், கதை முதலிய ஆயுதங்கள், திருமார்பில் ஸ்ரீவத்ஸம் என்ற அடையாளம், தலையில் வைடூர்யம் இழைத்த கிரீடம், கழுத்தில் கௌஸ்துபமணி, நீல மேகம் போன்ற ஆபரணங்கள் அணிந்த அற்புதமான உருவமுடைய குழந்தையாகத் தோன்றுகின்ற திருமாலை வசுதேவர் கண்டார். பகவானே தனக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கக் கண்டு ஆச்சரியமும், ஆனந்தமும் கொண்டார். ஆனால் அடுத்த வினாடியே, கம்சனை நினைத்தவர் கதிகலங்கி, கடவுளான உருவத்தை மறைத்து கொள்ளும்படி, பகவானை வேண்டினார். பகவானும், தேவகியைப் பார்த்து, “தாயே! இதற்கு முன் மூன்றாவது பிறவியில் ஸ்வாயம்புவ மன்வந்தரத்தில், நீ ப்ருச்னி எனும் பெயருடைய பெண்ணாகவும், உன் கணவராகிய இந்த வசுதேவர் ஸுதபஸ் என்னும் பெயருடையவராய் இருந்தார். உங்கள் இருவரையும் பிரம்மா, மக்களைப் படைக்கும்படி சொன்னதில் புலனடக்கத்தால், தவம் செய்ததில், மகிழ்ந்த நான் இதே போல் தரிசனம் தந்தேன், வேண்டும் வரம் கேட்கச் சொன்னதில் வீடுபேற்றை விரும்பாமல், என்னை மகனாகப் பிறக்க விரும்பினீர்கள். அந்தப் பிறவியில் உங்களுக்குப் புதல்வனாகப் பிறந்து, ப்ருச்னிகர்ப்பன் எனப் பெயர் பெற்றேன். அதற்கும் அடுத்த பிறவியில் கச்யபர், அதிதி என பெயர் பெற்ற உங்களிடம் வாமனன் என்ற பெயரில் புதல்வனாகத் தோன்றினேன். இப்பிறவியில் வசுதேவர், தேவகியாகப் பிறந்திருக்கிறீர்கள். இந்த மூன்றாம் பிறவியில் நானே பிள்ளையாகப் பிறந்திருக்கிறேன் என்பதைக் காண்பிக்கவே இந்த உருவத்தில் தோன்றினேன். எப்பொழுதும் என்னைப் பிள்ளையாகவே நினைத்துக் கொண்டிருப்பினும், என்னிடத்திலுள்ள அன்பினால் பரப்பிரம்மம் என்று பாவித்து, நட்புடையவர்களாகிச் சிறப்புடையதான வீடு பேற்றைப் பெறுவீர்கள்” என்று கூறி தன் மாயையினால் மனிதக் குழந்தையாக மாறினார்.

வடமதுராவில், காவலில் உள்ள தேவகிக்கு, ஆவணி மாதம், கிருஷ்ணபட்ச அஷ்டமி திதி, ரோகிணி நக்ஷத்திரத்தில், திருமால் அவதரித்தார். மாயையினால் அனைவரையும் நித்திரையில் ஆழ்த்திவிட்டு, தானே குழந்தையாகப் பிறந்ததைக் காட்டிவிட்டு, வசுதேவரிடம் “தன்னைக் கோகுலத்தில் விட்டு விட்டு அங்கு யசோதைக்குப் பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கு எடுத்து வந்து விடவும் ” என்றார். அதன்படி கை விலங்குகள் களைய, காவலர்கள் மயங்கியபடி இருக்க வசுதேவர் அக்குழந்தையை எடுத்துக் கொண்டு மழையில் நனைந்த வண்ணம், யமுனைநதியைக் கடந்து சென்றார். அதுசமயம் ஆதிசேஷன் என்ற நாகம், தன் படங்களைக் குடையாக்கி, குழந்தை மழைநீரில் நனையாமல் பார்த்துக்கொண்டு பின் சென்றார். வசுதேவர் கோகுலத்தில் நந்தகோபரிடம் கொடுத்து விட்டு, அங்கு பிறந்துள்ள பெண் குழந்தையை எடுத்து வந்தார். மறுபடியும் கைகளில் விலங்குகள் பூட்ட, திறந்த கதவுகள் மூடிய பின், குழந்தையின் அழுகுரல்கேட்டு, காவலர்கள் விழித்துக்கொண்டு, கம்சனிடம் செய்தியைச் சொல்ல ஓடினார்கள். கம்சனோ நிலைகுலைய, தரிகெட்டு ஓடிவந்தான். வந்தவன் குழந்தையைப் பார்த்து, பெண் என்று சற்று யோசித்தவன், அடுத்தவினாடி, அதையும் கொல்லத் துணிந்து, கால்களைப் பிடித்து, ஓங்கினான். அப்பெண் குழந்தை, ஆகாயத்தில் தாவி, “அடே கம்சா! என் கால்களைப் பற்றியதில் தற்சமயம் தப்பினாய்! உன்னைக் கொல்லப் பிறந்தவன் கோகுலத்தில் வளர்கிறான்!” என்று கூறி மாயை மறைந்தது.

கோகுலத்தில் யசோதை கண் விழித்த போது, அருகில் உள்ள ஆண் குழந்தையைக் கண்டு பூரித்துப் போனாள். நந்தகோபரும், கோகுலத்து வாழ் ஆயர்குடி மக்களும் கூடி விழாக் கொண்டாடினார்கள். அங்குள்ள மகிழ்ச்சியின் ஆரவாரம் வடமதுரையில் எட்டியதாகப் கூறப்படுகிறது.

நாரத முனிவர், உலக நன்மைக்காக சத்யலோகம் சென்று, பிரம்மதேவரிடம், “ஹே, பிதாவே! ஸ்ரீகிருஷ்ணாஷ்டமி விரத மகிமையும், மகத்துவத்தைப் பற்றி நான் அறிய விரும்புகிறேன். ஆகையால், தாங்கள் தயவு கூர்ந்து எனக்குச் சொல்ல வேண்டும்” என்று வணங்கி நின்றார்.

பிரம்மதேவரும், தன் குழந்தையாகிய, நாரதரிடம் சொல்லத் தொடங்கினார்.

இவ்விரதம் கலியுகத்தில் ஜனங்களுக்கு நேரும்படியான எல்லாப் பாவங்களையும் பஸ்மமாக்கும் படியானது. ஜயத்தையும், நன்மைகளையும் கொடுக்கும் ஜயந்தி என்று நினைத்த அளவில் ஏழு ஜன்மங்களில் தான் செய்த பாவங்கள்  நாசமடையும். ஜயந்தி தினத்தில் விரதமேற்று, உபவாசம் இருந்து செய்தவர்களின் மகாபாபங்களைப் போக்குவதன்றி அஸ்வமேதமும், தீர்த்த ஸ்னானங்களும் செய்த பலனும், ஆயிரம் காராம்பசுக்கள், ரத்தின கோடிகள், அஸ்வகஜ (குதிரை, யானை) தானங்கள் ஆயிரக்கணக்காகச் செய்த பலனும், அளவற்ற ஆபரணங்கள் குருக்ஷேத்திரத்தில் தானம் கொடுத்த பலனும், கோடி கன்னிகா தானப்பலனும்  அடைவார்கள், குருவுக்காகவோ, தன் எஜமானனுக்காகவோ, அந்தணர்களின் பொருட்டாவது தியாகத்தால், தன் தேகத்தால், செய்த தொண்டுகளால், ஏற்படும் பலனும், ஆபத்திலிருருப்பவர்களுடைய கஷ்டங்களை நீக்கிய புண்ணியபலனும் அடைவார்கள்.

சத்தியவான்களுக்குக் கிடைக்கும் புண்ணியமும், பவுர்ணமி, அமாவாசை, சங்கராந்தி தினங்களில் பிதுர்தேவதைகளை உத்தேசித்துச் செய்த புண்ணிய நதிகளின் நீராடல் பலன்களும், தர்ப்பணாதிகள் செய்த புண்ணியமும், கிடைக்கும். இவ்விரதம் எல்லாக் கோரிக்கைகளையும் கொடுக்கக்கூடியது. ஆகையால், முகுந்தன் முன், பக்தியோடு மூன்றேமுக்கால் நாழிகையாவது, பூஜித்து பஜனை செய்வோர்களேயானால், அவர்களுடைய பாவங்களெல்லாம் விலகும்.

இவ்விரதத்திற்கு கோகலாஷ்டமி என்றும் ஆவணி மாத கிருஷ்ண பக்ஷ அஷ்டமிக்கே பெயர் வழங்குகிறது. ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நக்ஷத்திரத்தில் இவ்விரதம் ஏற்று செய்தால், சதுர்புஜரான சக்ரபாணியினுடைய பாத  சேவையால் அளவற்ற பாவங்களிலிருந்து விலக்கி நற்கதி அடையச் செய்வார். இன்றைய தினத்தில் பகவானைப் பூஜித்த பேர்களுக்கு தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் விலகிப் போகும. மேலும், தர்ம அதர்ம, காம, மோக்ஷமென்னும் நான்கு வித புருஷார்த்தங்கள் கை கூடி வரும்.

சிவ  விஷ்ணு பக்தர்களும், பெண்களும், ராஜாக்களும் ஜாதி மதபேதமின்றி அனுஷ்டித்து, பகவானுடைய அருளுக்குப் பாத்திரமாவதோடு, பாபங்கள் விலகி முடிவில் வைகுண்டபதவி அடைவார்கள் என்பதாகும்” என்றார்.

மேலும், நாரதர், பிரம்மதேவரிடம் விரதம் அனுசரிக்கும் முறையையும், விரதத்தை ஏற்றுச் செய்தவர்களின் பலன்களையும் கேட்டார். அதற்குப் பிரம்மதேவரும் மனமு வந்து விவரித்தார். அவர் கூறியதாவது:

பூர்வத்தில் அரிச்சந்திரன், சனத்குமாரரிடம் பிரார்த்தித்து இவ்விரதம் செய்யும் முறையை அறிந்தார். விதிப்படி செய்யாத விரதங்களால் நன்மை உண்டாகாது. ஆகையால் பக்தியோடு இந்த விரத தினத்தில், சுத்த நீரில் நீராடி, வீட்டில் சுத்தமான இடத்தில் வண்ணக்கோலங்களிட்டு, அவரவர் சக்திக்குத்தக்கபடி, தங்கம், வெள்ளி, பஞ்சலோகங்களினால் ஆன கிருஷ்ண விக்கிரகத்தை வைத்து, அலங்கரித்து கிரமமாய் பூஜை செய்ய வேண்டும். ஆவாஹனம் முதல் அர்ச்சனை, நிவேதனம் பஜனை, பாட்டு, வாத்திய இசைகளுடன் இரவில் கண்விழித்து, மறுநாள் சுத்தமாக நீராடி, புனர்பூஜையை முடித்து ஓர் அந்தணருக்குப் புது ஆடை, தாம்பூலாதிகளுடன் தானம் அளிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் இவ்வுலகில் புத்திர பவுத்திரர்களுடன், சகல நன்மைகளையும் அனுபவித்து முடிவில் ஸ்ரீமந்நாராயணனுடைய பாதாரவிந்தங்களில் சேருவார்கள் என்று சொன்னார்.

மேலும், பார்வதிக்கு பரமேஸ்வரனும் இவ்விரத மகிமையை உபதேசித்தார். இவ்விரதம் செய்யும்  பெண்களுக்குக் கணவனைப் பிரிவது, இழப்பது போன்ற பல வித துன்பங்கள் வராமல் நீங்குவதுமன்றி, இருபத்தெட்டு கோடி ஏகாதசி உபவாசம் செய்த புண்ணிய பலன்கள் உண்டாகும். கிரகண புண்ணிய காலத்தில், கோதானம் கஜ தானம் முதலிய தானங்கள் செய்த போதிலும், இவ்விரதம் செய்யாவிட்டால், அதன் பலன் கிடைக்காது என்று கூறினார்.

இவரே முற்காலத்தில் அசுரர்களைக் கொன்றார். பிராணிகளை உண்டாக்கி, அவைகளுக்கு மங்களம் கொடுப்பவரும், உலகத்தைக் காப்பவரும், தர்மம் குறைந்தபோது தானே தர்மத்திலிருந்து மேலும் கீழுமான உலகங்களைக் காப்பாற்றி, காரியகாரணமான நித்திய ஆத்மாக்களைக் காப்பதும் இவரே. யாகங்களில் அஸ்திர, சாஸ்திர, மந்திரங்களைச் சொல்லித் துதிப்பதும் இவரையே, சதுர்வேதங்களிலும் இந்திராதிதேவர்களும் இவரையே துதிக்கின்றனர்.

பிரம்மாண்ட புராணத்தில் பிரம்மாவும், நாரதரும் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி விரத மகிமையை உரையாடியதாகப் புராணம் கூறுகிறது.

இவர்தான் ப்ரளய காலத்தில் ப்ரஹ்மகுகை என்னும், மூலப்ரக்ருதியில் பிரவேசித்தார். பூமியின் சிருஷ்டியும், கடலினின்று பூமியை உத்தரித்த ஆதிமூலமும் இவரே, இவரே பூமியை மூன்றடியாய் அளந்து ஜெயித்தவரும், காண்டவ வனத்தை காத்தவரும், லோகாராட்டிய ரென்றும், அந்தர்யாமி எனவும், வாசுதேவரென்றும், சங்கர்ணரென்றும் சொல்லப்படுகிறது. இவருக்கு மேல் ஒன்றும் இல்லை. ஆதிசேஷனுக்கே இவரைப் பற்றிச் சொல்ல முடியாது என்பார்கள். உலகத்தில் சூரியன், சந்திரன் முதலிய சுடர்களும், பூவுலகங்களும், அவற்றின் அதிபதிகள் மூவரும், திரேதாக்னிகளும், (ப்ரான, அபான, வ்யான, உதான, ஸமாநாதி) ஐந்து ஆகுதிகளும், எல்லாம் இவரே.

பூவுலகில் கண்ணன் பிறந்த இப்பொன்னாளை அஷ்டமி திதி, ரோகிணி நக்ஷத்திரம் ஆகிய இரண்டு தினமும் கொண்டாடுகிறார்கள். முன்னும் பின்னும் ஸ்ரீ ஜயந்தி என்றும், கோகுலாஷ்டமி என்றும் பண்டிகையாகவும் விரதமாகவும், உற்சவமாகவும் கொண்டாடுகிறார்கள்.

ஸ்ரீகிருஷ்ணஜயந்தி பண்டிகையை, பிருந்தாவனம், மதுரா, கோகுலம், துவாரகை, குருவாயூர், உடுப்பி, பூரிஜகந்நாத், பண்டரீபுரம் ஆகிய க்ஷேத்திரங்களில் மிகவும் விசேஷமாக சிறப்பாக விண்ணும், மண்ணும் வியக்கும் வண்ணம் கொண்டாடுகிறார்கள்.

ஸ்ரீகிருஷ்ணஜயந்தியில் வழுக்கு மரம் ஏறுவதையும், உறி அடித்திருநாளாக உறி அடிப்பதையும் மக்கள் விளையாட்டாகக் கொண்டு, கொண்டாடுகிறார்கள்.

கண்ணன் பிறந்த நாளான இன்று, வீடுகளில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகையாகும் அன்றை தினம் சுத்தமான இடத்தில், மாக்கோலங்களினால் கோலமிட்டு, கையில் வெண்ணையுடன் தவழும் கண்ணன் படம் வைத்து, அலங்கரித்து, வாசல் முதல் சுவாமி உள்ள இடம் வரை சிறு பாதங்கள் வரைவது வழக்கம். அதற்குக் காரணம் உண்டு கோகுலத்தில் கண்ணன் தோழர்களுடன் கோபியர் வீடுகளில் வெண்ணை திருடும்போது, தின்னும் அவரசத்தில் கீழே சிதறிய வெண்ணையில் கண்ணனின் மலர் பாதங்கள் பதிந்து வீடு முழுவதும் வெண்ணையாகும். அதனால் அந்தக் காலத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியைக் கொண்டாடும் மக்கள், வெண்ணையினால் பாதங்கள் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அந்தக் காரணத்தினாலேயே இந்நாளில் மாவினால் கோலம் போடுகிறார்கள். ஒவ்வொருவர் வீட்டிலும் கண்ணன் பிறப்பதாகவே தோன்றும் வண்ணம் தோற்றமளிக்கும்படி சிறப்பாகக் கொணடாடப்படுவதைக் காணலாம்.

ஸ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி அன்று, ஸ்ரீகிருஷ்ணா அஷ்டோத்திரம், விஷ்ணு ஸஹஸ்ரநாமம் படித்து பஜனை, பாட்டு என்றும், பலவித வாத்தியங்களுடன் இன்னிசைப் பாடல்களுடன் வழிபட வேண்டும்.

ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியை குடும்பத்துடன் கொண்டாட வேண்டும்.

அன்றைய தினம் நிவேதனம் செய்வதில், அவல், வெண்ணை முக்கியமாக இடம் பெற வேண்டும். வெல்லச் சீடை, உப்புச்சீடை, முறுக்கு, அப்பம், வடை, பாயசம், வெண் பொங்கல், பால், தயிர், அவல், வெண்ணை, பழங்கள் உட்பட தேங்காய், வெற்றிலை, பாக்கு எல்லாம் வைத்து சிறப்பாக பூஜிக்க வேண்டும்.

சிறு குழந்தைகளுக்கு பிரசாதம் கொடுப்பதும், அந்தணருக்கு தக்ஷிணையுடன் தாம்பூலம் கொடுப்பதும் மிக விசேஷமானதாகும்.

முக்கிய குறிப்புகள்:

1. ‘பாரிஜாத ’ (பவழமல்லி) புஷ்பங்களால் அர்ச்சிப்பது விசேஷமாகும்.

2. நந்தியாவட்டம், துளஸீ புஷ்பங்களால் அர்ச்சனை செய்வது விசேஷமானது.

3. ‘முறுக்கு, சீடை, வெண்ணை, அப்பம், அவல் ’  முதலிய பக்ஷணங்களை நைவேத்தியம் செய்வது விசேஷம்.

4. பாகவதத்தில் வருகிற ஸ்ரீகிருஷ்ண ஜனனம் பாராயணம் செய்ய வேண்டும்.

4. அன்று ‘சந்தான கோபால கிருஷ்ண விரதம் ’ இருக்க வேண்டும்.

பலன்  ஸந்தான ப்ராப்தி.

ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமீ பூஜை

1. பூஜைக்கு வேண்டிய பொருட்கள் பட்டியல்

பொதுவாக பூஜைக்கு தேவையான பொருட்கள்

1. மஞ்சள் பொடி
2. குங்குமம்
3. சந்தனம்
4. பூமாலை
5. உதிரிப்பூக்கள்
6. வெற்றிலை, பாக்கு
7. ஊதுபத்தி
8. சாம்பிராணி
9. பஞ்சு (திரிக்காக)
10. நல்லெண்ணெய்
11. கற்பூரம்
12. வெல்லம்
13. மாவிலை
14. வாழைப்பழம்
15. அரிசி
16. தேங்காய்
17. தயிர்
18. தேன்
19. தீப்பெட்டி
20. பூணூல்
21. வஸ்த்ரம்
22. அக்ஷதை (பச்சரிசியுடன் மஞ்சள் பொடி கலந்தது)
23. பஞ்சாம்ருதம் (வாழைப்பழம், பால், தேன், நெய், சர்க்கரை, கலந்தது)
24. கோலப்பொடி / அரிசி மாவு
25. பஞ்சகவ்யம்:
1. பசுவின் சிறுநீர் (கோமியம்), 2. பசுவின் சாணம், 3. பால், 4. தயிர், 5. நெய்  இவை ஐந்தும் சேர்ந்த கலவையே பஞ்ச கவ்யமாகும்.
26. திராட்சை, கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின் பால்.

குறிப்பு: ஹோமங்களுக்கு நெய் உபயோகிப்பது உத்தமம். ஒரு சில பூஜைகளில் நவதான்னியங்கள், கருகு மணிமாலை, பனைஓலை, மஞ்சள் கொத்து, ஏலக்காய் பொடி, கண் மை, அகல் விளக்கு, மூங்கில் தட்டு, பஞ்சினால் செய்த மாலை, போன்ற சில விசேஷ பொருட்கள் தேவைப்படுகின்றன. அந்தந்த பூஜையை செய்யும்போது அதற்கு தேவையானவற்றை முதலிலேயை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மாற்றுப் பொருள்கள்

பூஜைக்கு உரிய சில பொருள்கள் கிடைக்காமலிருக்கலாம். இந்த நிலையில் ஒரு பொருளுக்குப்பதிலாக இந்தப் பொருள்தான் மாற்றுப் பொருள் என்பது விரத கல்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை.

1. தேனுக்குப் பதிலாக வெல்லம்,
2. வஸ்த்ரம், ஆபரணம், சத்ரம், சாமரம், முதலிய ராஜோபசாரங்களுக்குப் பதிலாக அக்ஷதை (அ) புஷ்பம்.

2. நைவேத்ய பொருட்கள்: முருக்கு, சீடை, சாதம், தயிர், பால், வெண்ணை, அப்பம், அவல், தேங்காய், வாழைப்பழம்.

1. பூர்வாங்க பூஜைகள்

முதலில் (பக்கம் 10 முதல் பக்கம் 14 ம் பக்கம் வரை உள்ள (தீபம் +ஆசமனம் + குரு த்யானம் + கணபதி தியானம் + ப்ராணாயமம் + ஸங்கல்பம் + ஆஸன பூஜை + ஆத்ம பூஜை) பூர்வாங்க பூஜைகளை செய்யவும்.

1. பூர்வாங்க பூஜை

1. தீப மந்திரம்

(விளக்கை ஏற்றி வைத்து, தீபத்தைப் பார்த்து, இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)

தீபஜ்யோதி: பரம் ப்ரஹ்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ ஹரது மே பாபம்
தீபஜ்யோதிர் நமோஸஸ்து தே

2. ஆசமனம்

(நமது வலதுகை விரல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தெய்வம் குடியிருப்பதாக ஐதீகம். இதே போல் நமது அங்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தெய்வம் வசிப்பதாகக் கூறப்படுகிறது. ஆசமனம், அங்கவந்தனம் ஆகியன செய்தால், நமது உள்ளமும், உடலும் சுத்தமாகிறது என்று சாஸ்திரங்கள் கூறுவதை நாம் உணர வேண்டும். எல்லா நித்ய கர்மாக்களுக்கும், வைதிக கர்மாக்களுக்கும் ஆசமனம், அங்க வந்தனம் இன்றியமையாததாகும்.)

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங் கையில் விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)

ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

(ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசத்துக் கொள்ள வேண்டும்.)

1. கேச ’வ  வலக்கைக் கட்டை விரல் வலக்கன்னம்
2. நாராயண  வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்
3. மாதவ  வலக்கை மோதிர விரல் வலக்கண்
4. கோவிந்த  வலக்கை மோதிர விரல் இடக்கண்
5. விஷ்ணு  வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி
6. மதுஸூதன  வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி
7. த்ரிவிக்ரம்  வலக்கை சிறுவிரல், வலது காது
8. வாமன  வலக்கை சிறுவிரல் இடது காது
9. ஸ்ரீதர  வலக்கை நடுவிரல், வலதுதோள்
10. ஹ்ருஷீகேச ’ வலக்கை நடுவிரல், இடது தோள்
11. பத்மநாப  நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)
12. தாமோதர  ஐந்து விரல்களும் சேர்த்து, தலை

குரு த்யானம்

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு:
குருர்தேவோ மஹேச் ’ வர:
குருஸ்ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீகுரவே நம:

4. கணபதி தியானம்

இரண்டு கைகளிலும் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

5. ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கையிலும், மூச்சை மெதுவாக வெளியிடும் போதும், இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாகச் சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ:, ஓம்
மஹ:, ஓம் ஜன:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம்
தத்ஸவிதுர் வரேண்யம், பர்க்கோ
தேவஸ்ய தீமஹி, தியோ யோ ந:
ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதீ
ரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ்
ஸுவரோம்

(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)

6. ஸங்கல்பம்

(வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக்கொண்டு, இடது கையுடன் சேர்த்து வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு, அக்ஷதையை வடக்கே போடவும்.)

மமோபாத்த ஸமஸ்த துரித, க்ஷயத்வாரா ஸ்ரீ
பரமேச்’வர ப்ரீத்யர்த்தம்,
கரிஷ்யமாணஸ்ய கர்மண:
நிர்விக்னேன பரிஸமாப்த்
யர்த்தம் ஆதௌ விக்னே
ச்’வர பூஜாம் கரிஷ்யே

7. ஆஸன பூஜை

(பூஜை ஆரம்பிக்கும் முன் நாம் அமரும் ஆசனம் / பலகையை சுத்தப்படுத்துவதற்காக, கீழ்க்காணும் மந்திரங்களை சொல்லி தீர்த்தம் தெளித்து பிறகு அமர்ந்து கொள்ளவும்.)

ப்ருத்வி த்வயா த்ருதா லோகா
தேவி த்வம் விஷ்ணுனா த்ருதா
த்வம் ச தாரய மாம் தேவி
பவித்ரம் குரு ச ஆஸனம்

8. ஆத்ம பூஜை

(மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை தியானித்து கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி தலையில் அக்ஷதையைப் போட்டுக்கொள்ளவும்.)

தேஹோ தேவாலய: ப்ரோக்த:
ஜீவோ தேவ: ஸநாதன:
த்யஜேத் அஜ்ஞான நிர்மால்யம்
ஸோஹம்பாவேன பூஜயேத்

2. விக்னேச்’வர பூஜை
(மஞ்சள் பிள்ளையார்)

ஒவ்வொரு பூஜைக்கும் முன்னால் இந்த விக்னேச் ’வர பூஜையை செய்ய வேண்டும்.

(தியானம் + ப்ராணாயாமம் + ஸங்கல்பம் + ப்ரார்த்தனை + அர்ச்சனை + நிவேதன மந்த்ரங்கள் + தீபாராதனை +நமஸ்காரம்)

விக்னேச்’வர பூஜை
மஞ்சள் பிள்ளையார் பூஜை

இப்பூஜையானது எல்லா ப்ரதான பூஜைகளுக்கும் மற்றும் எல்லா சுபகாரியங்களுக்கும் முதலில், ஆரம்பத்தில் செய்ய வேண்டிய பூஜையாகும்.

தீப மந்திரம்

(விளக்கை ஏற்றி வைத்து தீபத்தை பார்த்து இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)

தீபஜோதி: பரம் ப்ரஹ்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ மே ஹரது பாபம்
தீபஜ்யோதிர் நமோஸ்து தே

ஆசமனம்

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு  கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி, சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)

ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

1. கேச ’வ  வலக்கைக் கட்டைவிரல் வலக்கன்னம்
2. நாராயண  வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்
3. மாதவ  வலக்கை மோதிர விரல், வலக்கண்
4. கோவிந்த  வலக்கை மோதிரவிரல், இடக்கண்
5. விஷ்ணு  வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி
6. மதுஸூதன  வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி
7. த்ரிவிக்ரம  வலக்கை சிறுவிரல், வலது காது
8. வாமன வலக்கை சிறுவிரல், இடது காது
9. ஸ்ரீதர  வலக்கை நடுவிரல், வலதுதோள்
10. ஹ்ருஷீகேச ’  வலக்கை நடுவிரல், இடதுதோள்
11. பத்மநாப  நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)
12. தாமோதர  ஐந்து விரல்களும் சேர்த்து, தலை.

தியானம்

வலது கையில் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக்கொண்டு கீழ்க் கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ ந்தயே

ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன:,
ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம், பர்க்கோதேவஸ்ய
தீமஹி, தியோ யோ ந: ப்ரசோ
தயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:,
அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரேம்
(வலது காதை தொடவும்.)

ஸங்கல்பம்

வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக் கொண்டு, இடது கை மேல் வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு அக்ஷதையை வடக்கே போடவும்.

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ
பரமேச்’ வர ப்ரீத்யர்த்தம், கரிஷ்யமாணஸ்ய
கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம்
ஆதௌ விக்னேச்’வர பூஜாம் கரிஷ்யே

குறிப்பு: மஞ்சள் பொடியை தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கூம்பு வடிவில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பிரார்த்தனை

(மஞ்சள் பிள்ளையாருக்கு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி ஆவாஹனம் (விக்னேஸ்வரரை வரவழைத்தல்) செய்து, புஷ்பம், அக்ஷதையை போடவும்.) வேத மந்திரங்களை ஸ்வரத்துடன் சொல்பவர்கள் மட்டுமே கீழ்கண்ட மந்திரங்களைச் சொல்லவும்.

கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம் கவீநாம் உபமச்’ரவஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத
ஆந: ச்’ ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதனம்
அஸ்மின் ஹரித்ராபிம்பே
விக்னேச்’ வரம் த்யாயாமி,
விக்னேச்’வரம் ஆவாஹயாமி

(மற்றவர்கள் கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லலாம்.)

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

அஸ்மின் ஹரித்ராபிம்பே விக்னேச்’வரம்
த்யாயாமி, விக்னேச்’வரம் ஆவாஹயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு புஷ்பம், அக்ஷதை போட்டு கீழ்கண்ட மந்திரம் சொல்லி பிள்ளையாரை ஆசனத்தில் அமர்த்தியதாக பாவனை செய்ய வேண்டும்.)

விக்னேச்’வராய நம:
ஆஸனம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாரின் திருவடிகளை அலம்புதல். உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் திருவடிக்கு நேராகக் காட்டி அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)

விக்னேச்’ வராய நம:
பாத்யம் ஸமர்ப்பயாமி

(கீழ்கண்ட மந்திரம் சொல்லி உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் கைகளில் அளிப்பதுபோல பாவனை செய்து தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)

விக்னேச்’வராய நம:
அர்க்யம் ஸமர்ப்பயாமி

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தெய்வத்தின் வாய்க்கு நேராக காட்டி அர்க்யபாத்திரத்தில் விடவும்.)

விக்னேச் ’வராய நம:
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையார் மீது தீர்த்தத்தை தெளிக்கவும்)

விக்னேச் ’ வராய நம:
ஸ்நானம் ஸமர்ப்பயாமி

(அர்க்யபாத்திரத்தில் ஜலம் விடவும்)

விக்னேச் ’வராய நம: ஸ்நாநாநந்தரம்
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு வஸ்த்ரம் அளிப்பது போல் அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

விக்னேச்’ வராய நம:
வஸ்த்ரார்த்தம் அக்ஷதான்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு பூணூலுக்கு பதிலாக அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்.)

விக்னேச் ’ வராய நம: யக்ஞோப
வீதார்த்தம் அக்ஷதான்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு நெற்றியில் சந்தனம் வைக்கவும்)

விக்னேச் ’ வராய நம: கந்தாம்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு குங்குமம் வைக்கவும்.)

விக்னேச் ’வராய நம: கந்தோபரி
குங்குமம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு அக்ஷதையை சமர்ப்பிக்கவும்.)

விக்னேச்’வராய நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கவும்.)

விக்னேச்’ வராய நம:
புஷ்பை: பூஜயாமி

அர்ச்சனை

(மஞ்சள் பிள்ளையாரை பல பெயர்களில் புஷ்பங்களால் அர்ச்சனை செய்யவும்.)

ஓம் ஸுமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூ’ர்ப்ப கர்ணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
ஓம் மஹாகணபதயே நம:

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி. (அக்ஷதை, புஷ்பம், போடவும்.)

தூபதீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.
(அக்ஷதை, புஷ்பம் போடவும்.)

நிவேதன மந்த்ரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை தாம்பாளத்தில் வைத்து கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.)

ஓம் பூர்புவஸ்ஸுவ:

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தத்ஸவிதுர்வரேண்யம்
பர்கோதேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்

(தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளிக்கவும்.)

(பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

(காலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ
ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி
(மாலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ
ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி
அம்ருதமஸ்து
அம்ருதோபஸ்தரணமஸி

(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ஸ்வாஹா என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமிக்கு அன்னம் ஊட்டுவது போல் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா,
ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா,
ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா,
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,

ப்ரஹ்மணீம ஆத்மா அம்ருதத்வாய, விக்னேச்’ வராய நம: நாளீகேர கண்ட த்வயம், கதலீபலம் நிவேதயாமி.

மத்யே மத்யே பானீயம்
ஸமர்ப்பயாமி.

(தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

அம்ருதாபிதாநமஸி
(ஆசமனீயம் ஸமர்ப்பயாமி)

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து இரண்டு முறை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

பூகீபல ஸமாயுக்தம்
நாகவல்லீ தளைர்யுதம்
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம்
தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்

விக்னேச் ’ வராய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி (வெற்றிலை பாக்கு தாம்பூலத்தில் சிறிதளவு ஜலம் விட்டு நிவேதனம் செய்யவும்.)

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 6. கிருஷ்ண ஜென்மாஷ்டமி பூஜை »
temple news
கிருஷ்ணாவதாரம் திருமாலின் ஒன்பதாவது அவதாரமாகும். ராமாவதாரத்தில் அவரால் விடப்பட்ட சில அரும்பெரும் ... மேலும்
 

தீபாராதனை அக்டோபர் 31,2018

தீபாராதனைவிக்னேச்’வராய நம:கற்பூர நீராஜனம் ஸந்தர்சயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு கற்பூர ஆரத்தி ... மேலும்
 

மந்த்ர புஷ்பம் அக்டோபர் 31,2018

மந்த்ர புஷ்பம்ஸ்ரீ க்ருஷ்ண ஸர்வலோகேச ’ நாநாபுஷ்பை: ஸுவாஸிதம் புஷ்பாஞ்ஜலிம் ப்ரதாஸ்யாமி ஸர்வலோக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar