பதிவு செய்த நாள்
07
நவ
2018
01:11
ராசிபுரம்: ராசிபுரம் மற்றும் அத்திபலகானூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ராசிபுரம் நித்யசுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் மற்றும் அத்திபலகானூரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 10 நாட்களுக்கு முன் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை, பூவோடு எடுத்து கோவிலை சுற்றி வலம் வருதல், உருளுதண்டம் போடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ச்சியாக பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கினர். இதில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, தங்கள் வேண்டுதல் நிறைவேறவும், பெண்கள் தங்களுக்கு குழந்தை வரம் வேண்டியும், தொழில் வளர்ச்சி பெறவும் கோரி சாட்டையடி வாங்கினர். ராசிபுரம் கோவிலில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்களும், அத்திபலகானூரில், 200க்கும் மேற்பட்ட பக்தர்களும் சாட்டையடி வாங்கினர்.