பதிவு செய்த நாள்
08
நவ
2018
02:11
மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே, பவானி ஆற்றில் குளிப்பதற்கு வசதியாக, படித்துறையும், தடுப்புக் கம்பிகளும் அமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.
கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு தினமும், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர் களும், விடுமுறை மற்றும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர் களும் வந்துசெல்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் பவானி ஆற்றில் குளித்த பிறகு, கோவிலுக்கு சுவாமி கும்பிட செல்கின்றனர். கோவில் நிர்வாகத்தின் சார்பில் தற்போது, பவானி ஆற்றின் கரை யோரம் உள்ள விநாயகர் கோவில் அருகே, கான்கிரீட் தளமும், தடுப்பு கம்பியும் அமைக்கப் பட்டுள்ளது.வெல்ஸ்புரத்தில் கட்டியுள்ள கதவணையில் மின்சாரம் உற்பத்தி செய்ய தண்ணீர் தேக்கி வைக்கும் போதும், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கும் ஏற்படும் போதும், விநாயகர் கோவில் சுவர் வரை தண்ணீர் வரும்.மற்ற நேரங்களில் ஆற்றில் தண்ணீர் மிகவும் குறைவாக ஓடும்.
தற்போதுள்ள கான்கிரீட் தளத்துக்கும் கீழே, ஆறு அடிக்கு பெரிய பள்ளம் உள்ளது. அதில் நிறைய கற்கள் கிடப்பதால், பக்தர்கள் அங்கு குளிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். ஆற்றின் கரையோரம் முள் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. அதனால், விநாயகர் கோவில் அருகில் மட்டும் தான் பவானி ஆற்றில் குளிக்க வேண்டியுள்ளது.ஒரே இடத்தில் பக்தர்கள் குளிக்கும் போது, இட நெருக்கடியும் ஏற்படுகிறது. காவிரி ஆறும், பவானி ஆறும் சங்கமம் ஆகும் இடமான, பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் அருகே, காவிரி ஆற்றில் படித்துறையும், தடுப்பு கம்பிகளும் அமைத்துள்ளனர்.அதுபோல், வனபத்ரகாளிம்மன் கோவில் அருகே பவானி ஆற்றில் படித்துறையும், தடுப்பு கம்பிகளும் அமைக்க, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.