Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்பாத்தியில் ரத சங்கமம் சபரிமலையில் நாளை (நவம்., 18.11.2018)ல் சபரிமலையில் நாளை (நவம்., 18.11.2018)ல்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை தீப திருவிழா: ஆன்லைனில் டிக்கெட் விற்பனை
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை தீப திருவிழா: ஆன்லைனில் டிக்கெட் விற்பனை

பதிவு செய்த நாள்

17 நவ
2018
11:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், தீபத் திருவிழா, 23ம் தேதி, காலை, 4:00 மணிக்கு சுவாமி கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும். பரணி தீபம், மகா தீபம் தரிசனம் செய்ய, சிறப்பு கட்டண தரிசன டிக்கெட் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி, பரணி தீப தரிசனத்துக்கு, 500 ரூபாய் கட்டணத்தில், 500 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும். மாலையில் நடைபெறும் மகா தீப தரிசனத்துக்கு, 500 ரூபாய் கட்டணத்தில், 1,000 டிக்கெட்கள், 600 ரூபாய் கட்டணத்தில், 100 டிக்கெட்கள் வழங்கப்படும். சிறப்பு கட்டண தரிசன டிக்கெட் பெற விரும்புவோர்,

www.arunachaleswarartemple.tnhrce.in என்ற இணையதளத்தில், 21ம் தேதி, காலை, 11:00 மணி முதல் பெற்றுக் கொள்ளலாம்.

ஆன்லைனில் டிக்கெட் பெற ஆதார் எண், மொபைல்போன் எண், இ -மெயில் முகவரி விபரம் தேவை. ஒரு ஆதார் அட்டைக்கு, ஒரு டிக்கெட் மட்டுமே பெற முடியும்.ஆன்லைனில் விபரங்களை பதிவு செய்ததும், மொபைல்போன் எண்ணுக்கு ரகசிய எண் - ஓ.டி.பி., வரும். அதை பதிவேற்றி, டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். தரிசனத்துக்கு வரும் போது, ஆன்லைன் டிக்கெட் மற்றும் அசல் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தீப திருவிழாவிற்கு சிறப்பு ரயில் இயக்கம்:  திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, விழுப்புரம், வேலூரிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இது குறித்து, தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, விழுப்புரத்திலிருந்து, திருவண்ணாமலைக்கு வரும், 22, 23ல், காலை, 10:00 மணிக்கும், இரவு, 10:00 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப் படுகின்றன. இதேபோல, மறு மார்க்கத்தில், திருவண்ணாமலையிலிருந்து, விழுப்புரத்துக்கு வரும், 22, 23ல், மதியம், 1:00 மணிக்கும், வரும், 23 மற்றும், 24ல், காலை, 4:15 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ஊர்களில் ரயில்கள் நின்று செல்லும். இதேபோல, வேலூரிலிருந்து, திருவண்ணாமலைக்கு வரும், 22, 23ல், இரவு, 9:30 மணிக்கும், மறு மார்க்கத்தில் திருவண்ணாமலையிலிருந்து, வேலூருக்கு வரும், 23, 24ல், காலை, 4:15 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar