மதுரையில் ஐயப்ப பக்தர்கள் நாளை (நவம்., 21ல்) ஆர்ப்பாட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2018 12:11
மதுரை: மதுரையில் ஐயப்பபக்தர்கள் சார்பில் சபரி மலையில் புனிதம் காக்க வேண்டும் என வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் நாளை (நவ.,21) காலை 10:30 மணிக்கு நடக்கிறது.
சபரிமலைக்கு பெண்கள் செல்வதை தடுப்பதற்காக துவங்கப்பட்ட போராட்டம் தற்போது தமிழகம் மற்றும் கேரளத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் குடும்ப பெண்கள் அதிகம்பங்கேற்று எதிர்ப்பைதெரிவிக்கின்றனர்.
இதன் தொடர்ச்சியாக மதுரையில் நடக்கும்ஆர்ப்பாட்டத்திற்குபக்தர்கள் திரளாக பங்கேற்க சபரிமலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பங்கேற்க விரும்புவோர் 97895 16376ல் தொடர்புகொள்ளலாம்.