பதிவு செய்த நாள்
26
நவ
2018
02:11
திருப்பூர் : ஒரே நாளில், திருப்பதி ஏழுமலையான், சபரி மலை அய்யப்பனை தரிசிக்க, அடுத்த மாதம், 9ம் தேதி சிறப்பு ரயில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தில் உள்ள, திருப்பதி ஏழுமலையான் கோவில், கேரளாவில், சபரிமலை அய்யப்பன் கோவில் ஆகியவை, நாட்டில் உள்ள மிக முக்கிய வழிபாட்டு தலங்கள். தினமும், லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்த, இரு வழிபாட்டு தலங்களுக்கும், ஒரே ரயிலில் செல்வதற்கான வசதியை, தெற்கு ரயில்வே ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, அடுத்த மாதம், 9ம் தேதி கேரளா, கொல்லத்தில் இருந்து, 6:45 மணிக்கு சிறப்பு ரயில், புறப்படுகிறது. காயன்குளம், மவோலிக்கரா, செங்கனுார், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, சித்துார் வழியாக பயணித்து, இரவு, 11:55க்கு திருப்பதி சென்று அடையும். மறுமார்க்கமாக, மறுநாள், திருப்பதியில் புறப்படும் ரயில், இரவு, சபரிமலை வந்தடையும்.இந்த சிறப்பு ரயிலில், மூன்று, ஏசி பெட்டி, 10 படுக்கை வசதி கொண்ட பெட்டி, 10 பொது பெட்டி இடம்பெறும். ரயில் புறப்படும் மற்றும் நின்று செல்லும் அனைத்து ரயில்வே ஸ்டஷேனிலும், டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என, தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.