பதிவு செய்த நாள்
26
நவ
2018
02:11
கூடலுார்: ஐயப்ப பக்தர்களுக்கு லோயர்கேம்ப் குறுவனத்துப்பாலம் பகவதியம்மன் கோயிலில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் அன்னதான முகாம் துவக்கப்பட்டுள்ளது. அகிலபாரத ஐயப்ப சேவா சங்கமும், கூடலுார் எஸ்.கே.எஸ்.செல்வராஜ் அன்னதான கமிட்டியும் இணைந்து, ஐயப்ப பக்தர்களுக்கு இரண்டாம் ஆண்டு அன்னதான சாலவாக்கம்: எடமச்சி மலை மீது, கார்த்திகை தீப விழா, மூன்று நாட்கள் நடந்தது.உத்திரமேரூர் ஒன்றியம், எடமச்சி கிராமத்தில் உள்ள, 1,370 அடி உயர மலை மீது, உண்ணாமலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோவில் உள்ளது. இங்கு, 138ம் ஆண்டு, கார்த்திகை தீப விழா, மூன்று நாட்களாக நடந்தது.மாலை, 6:00 மணிக்கு, அப்பகுதியில் உள்ள காமாட்சி அம்பாள் உடனுறை முத்தீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர் மற்றும் அம்மன் கோவில்களில், அகல் விளக்குகள் ஏற்றி, சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.தொடர்ந்து மேள வாத்தி யம் முழங்க, பக்தர்கள் மலைக்கு சென்று, அண்ணா மலையாருக்கு தீபம் ஏற்றி, பூஜைகள் செய்தனர்.
முகாமை துவக்கியுள்ளது. லோயர்கேம்ப் குறுவனத்துப் பாலம் அருகே உள்ள பகவதியம்மன் கோயிலில் வரும் ஜன. 14 வரை தொடர்ந்து அன்னதானம் நடைபெறும்.மேலும், இப்பகுதியில் ஐயப்ப பக்தர்களுக்கு ஓய்வு அறை மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. துவக்க விழாவை முன்னிட்டு ஐயப்பன் யாக பூஜை நடந்தது. ஏற்பாடுகளை அன்னதான கமிட்டி தலைவர் பாரி, முகாம் பொறுப்பாளர்கள் சுசீந்திரன், கர்ணன், முத்து, ஒருங்கிணைப்பாளர்கள் செல்வன், கதிரேசன், பிரபு, சிவராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.