கடலூர்:புதுக்குப்பம் காவலர் குடியிருப்பில் உள்ள பராசக்தி மாரியம்மன் கோவிலில் நடந்த விளக்கு பூஜையில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர். கடலூர், புதுக்குப்பம் காவலர் குடியிருப்பில் உள்ள பராசக்தி மாரியம்மன் கோவிலில் ஐந்தாம் ஆண்டு ஐயப்ப விளக்கு பூஜை மற்றும் கன்னி பூஜை நடந்தது.இதையொட்டி, காலை 5:00 மணிக்கு கணபதி ஹோமம், மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு விளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர்.மகா தீபாராதனை, இரவு 8:00 மணிக்கு கன்னி பூஜை, மகா தீபாராதனை, அன்னதானம் வழங்கப் பட்டது.