பதிவு செய்த நாள்
11
டிச
2018
03:12
பழநி:சபரிமலை சீசனை முன்னிட்டு, பழநி வரும் பிறமாநில பக்தர்கள் போலி கைடுகளிடம் சிக்கி பணத்தை இழப்பது தொடர்கிறது.கார்த்திகை மாதம், சபரிமலை சீசனை முன்னிட்டு, கர்நாடக, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் பழநிக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்களை, பஸ் ஸ்டாண்ட், அடிவாரம் பகுதிகளி லேயே வழி மறிக்கும் காவிஉடை அணிந்த போலி கைடுகள் ஸ்பெஷல் அறைகள், தரிசனம், பூஜை செய்து தருவதாகக் கூறி ரூ.500 முதல் ரூ.3 ஆயிரம்வரை வசூலிக்கின்றனர்.
பாதவிநாயகர் கோயிலில் துவங்கும் இவர்களின் அட்டூழியம் மலைக்கோயில் வரை தொடர்கிறது. இதற்கு சில அதிகாரிகளின் ஒத்துழைப்பும் உள்ளது. இப்போலி கைடுகளிடம் சிக்கும்பக்தர்கள் பணத்தை இழந்து அவதிப்படுகின்றனர். இவ்விஷயத்தில் பக்தர்கள் எழுத்துபூர்வமாக புகார் அளித்தால் மட்டுமே போலீஸ் மற்றும் கோயில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறுவதால், புகார் செய்தபின் மீண்டும் வரவேண்டுமேஎன்ற அச்சத்தின் காரணமாக யாரும் புகார் அளிப்பதில்லை. பணம் பறிக்கும் போலி கைடுகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.