கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு - வடசித்துார் ரோட்டில், கருமலை பிரமகிரி அய்யாசுவாமி கோவில் உள்ளது. கோவில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேகம் நடக்கிறது. நேற்று விக்னஷே்வர பூஜையுடன் கணபதி ஹாேமம் துவங்கியது. தொடர்ந்து, முதல்கால யாக பூஜையும் நடந்தது.இன்று அதிகாலை, 4:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும் தொடர்ந்து, அதிகாலை, 5:00 முதல், 6:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு மேல் சிறப்பு அன்னதானம் நடக்கிறது.