கடலுார்: கடலுார் அடுத்த பச்சையாங்குப்பம் முத்தாலம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.அதையொட்டி கடந்த 6ம் தேதி கணபதி ேஹாமத்துடன் பூஜை துவங்கியது. நேற்று காலை 6:00 மணிக்கு 6ம் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து பிம்பசுத்தி, ரக் ஷாபந்தனம், நாடி சந்தானம், நடந்தது. பின்னர் 9:00 மணிக்கு கலச புறப்பாடு நடந்து, 9:30 மணிக்கு முத்தாலம்மன், ராஜகோபுரம், விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.