திருவாடானை திருவெற்றியூர் கோயில் தேர் பணிகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2018 04:12
திருவாடானை : திருவெற்றியூர் கோயில் தேர் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது. சிவகங்கை தேவஸ் தானத்திற்கு உட்பட்ட இக் கோயிலில் புதிய தேர் செய்யும் பணி கடந்தாண்டு துவங்கியது. தற்போது 4 இரும்பு சக்கரம் பொருத்தப்பட்டு, சிலைகள் வடிவமைக்கப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் இருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர். தேவஸ்தான கண்காணிப்பாளர் சுந்தரராஜன் கூறியதாவது: புதிய தேர் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இதற்கான வெள்ளோட்டம் ஜனவரி மாதம் நடைபெறும், என்றார்.