* தர்மம் கொடுப்போரைத் தடுக்காதே. செய்த தர்மம் ஒருவனை வாழ வைக்கும். * கடவுள் நினைப்பு இல்லாதவர் வீட்டில் உணவு உண்பது கூடாது. * கடவுளிடத்தில் தூய அன்பும், பக்தியும் செலுத்த வேண்டும். * ஒருபோதும் கடவுளைத் தாழ்த்தியும், மனிதனை உயர்த்தியும் பேசுதல் கூடாது. * மற்றவர்களிடம் உரத்துப் பேசல், சண்டை இடுதல், வம்பு, வழக்காடுதல் கூடாது. * ஜீவகாருண்ய ஒழுக்கத்திற்கு முதற்படி புலால்மறுத்தல். சாத்வீக உணவால் நல்ல சிந்தனை உருவாகும். * குருவை வணங்க தயங்காதே. உன் வாழ்வில் அவர்களின் உபதேசங்களை பின்பற்றி நட. * வட்டியைப் பெருக்கி எளியோரின் சொத்துகளை அபகரிக்காதே. * பிறர் குற்றங்களைக் கவனிக்காதே. நீ குற்றமின்றி நேர்வழியில் நடந்து காட்டு. * நல்ல எண்ணமே உன் நடத்தையைப் பாதுகாக்கும். * நீதி, நேர்மை தவறாமல் ஒழுக்கமுடன் வாழக் கற்றுக்கொள். * யாரையும் கடுகடுத்த முகத்துடன் பார்க்காதே. எப்போதும் முகமலர்ச்சியுடன் இரு.