பதிவு செய்த நாள்
24
டிச
2018
04:12
மடத்துக்குளம்:கணியூர் ஐயப்பன் கோவிலில் ஆறாம் ஆண்டு மண்டல பூஜை, கோமாதா, அஸ்வமேத பூஜை நடந்தது.கணியூர் ஐயப்பன் கோவிலில் ஆறாம்ஆண்டு, மண்டல பூஜை, 108 பால்குட அபிஷேகம், கோமாதா அஸ்வமேத பூஜை நிகழ்ச்சிகள் கடந்த 22ம் தேதி மாலை உற்சவமூர்த்தி அமராவதி ஆற்றுக்கு குதிரையில் செல்லுதலுடன், தொடங்கியது.
ஆற்றங்கரையில் சிறப்பு அபிஷேகம், விநாயகர் கோவிலில் குழந்தை ஐயப்ப பக்தர்களுக்கு இருமுடி நிறைத்தல், ஊர்வலமாக கோவிலுக்கு செல்லுதல், பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது. நேற்று (டிசம்., 23ல்)காலை, 4:45 மணிக்கு ஐயப்ப சுப்ரபாதம் பாடி நடைதிறப்பு, 6:00 மணிக்கு மங்கள இசை, கணபதி ஹோமம், 7:00 மணிக்கு கோமாதா, அஸ்வமேத யாக பூஜை, 8:00 மணிக்கு ஏழு நதியில் இருந்து எடுத்து வந்த, புண்ணிய தீர்த்தம் மற்றும் 24 மூலிகைகளில் அபிேஷகம், 8:30 மணிக்கு 108 பால் குட அபிஷேகம், 10:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, தொடர்ந்து, ஐயப்ப பக்தர்கள் பஜனை, அன்னதானம் நடந்தன.