பதிவு செய்த நாள்
24
டிச
2018
04:12
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடக்கிறது. கடந்த, 16ம் தேதி துவங்கிய லட்சார்ச்சனை இன்று (டிசம்., 24ல்) காலை, 8:00 மணி வரை நடக்கிறது.
வரும், 25ம் தேதி காலை, 5:00 மணி முதல் தொடர்ந்து, 24 மணி நேரம் அகண்டநாம பஜனை நடக்கிறது. தொடர்ந்து, 26ம் தேதி காலை, 6:00 மணிக்கு பால்குட தீர்த்த அபிஷேகம், மாலை, 6:00 மணிக்கு, 108 திருவிளக்கு பூஜை நடக்கிறது. மண்டல பூஜை விழாவான, 27ம் தேதி காலை, 5:00 மணிக்கு நடைதிறப்பு, நிர்மால்ய தரிசனம், உதயாஸ்த்மன பூஜை, 5:30 மணிக்கு கணபதி ஹோமமம், மகா அஷ்டாபிஷேகம், மாலை, 4:00 மணிக்கு திருவாபரணபெட்டி ஊர்வலம், சிறப்பு அலங்கார பூஜை, அன்னதானம், பஜனை, ஹரிவராசனம் நடக்கும்.