கிறிஸ்துமஸ் அன்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள பரிசுப் பொருட்களை பரிமாறுவது, போட்டிகளை நடத்துவது என பலவிதமாக கொண்டாட்டம் விரிவடைந்தது. அன்று கிறிஸ்தவர்கள் குழுக்களாக கேரல் சர்வீஸ் என்ற நிகழ்ச்சியில் குழந்தை இயேசுவை வாழ்த்தியும், அவரது பிறப்பு, அவர் உலகிற்கு வந்த நோக்கம் உள்ளிட்ட கருத்துகளை கொண்ட பாடல்கள் பாடுவது வழக்கம். 1847ல் பிரான்சில் முதல் முதலாக நடந்த கிறிஸ்துமஸ் கேரலில் ஓ... ஹோலி நைட் என்ற கிறிஸ்துவ பாடல் பாடப்பட்டது. இந்நாளை விசேஷமாக கருதுவதால் மக்கள் தங்களின் புதிய முயற்சிகளை தொடங்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.