Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவீரட்டீஸ்வரர் கோவில் ... தேய்பிறை அஷ்டமி: காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு தேய்பிறை அஷ்டமி: காலபைரவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
படியளந்த சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மன்: அஷ்டமி சப்பரத்தில் உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
படியளந்த சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மன்: அஷ்டமி சப்பரத்தில் உலா

பதிவு செய்த நாள்

29 டிச
2018
05:12

மதுரை : மதுரையில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை, மீனாட்சி அம்மனும் அஷ்டமி சப்பரத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் வீதி உலா வந்தனர்.

மதுரையில் அனைத்து உயிர்களுக்கும் படியளக்க அஷ்டமி சப்பரத்தில் சுவாமியும், அம்மனும் உலா வந்தனர். ஒரு சமயம் உலகத்தில் அனைத்து உயிர்களுக்கும் படியளக்க சிவபெருமான் புறப்பட்டார். அவரை சோதிக்க நினைத்த அம்மன், பாத்திரத்தில் எறும்பு ஒன்றை அடைத்து வைத்தார். எல்லா உயிர்களுக்கும் படி அளந்த திருப்தியில் திரும்பிய சிவபெருமானிடம், ஒரு உயிருக்கு மட்டும் நீங்கள் படியளக்கவில்லை, என்றார் அம்மன். பாத்திரத்தை திறந்து பார்த்தபோது, அந்த எறும்புக்கு அருகிலும் அரிசி இருந்தது. இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், மார்கழி தேய்பிறை அஷ்டமி நாளில் சுவாமியும் பிரியாவிடை அம்மனும் ஒரு சப்பரத்திலும், மீனாட்சி அம்மன் தனி சப்பரத்திலும் மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் வகையில் உலா வருவது வழக்கம். அதன்படி இன்று (டிச.,29ல்) அதிகாலை கோயிலில் இருந்து இருவரும் புறப்பாடாகி, கீழமாசிவீதி வந்தனர். அங்கு இரு சப்பரங்களில், சிவபெருமானும், அம்மனும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கீழவெளிவீதி, தெற்கு வெளி வீதி, மேலவெளிவீதி வடக்கு வெளிவீதி என நான்கு வெளி வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வரும் வழியில், ஜீவராசிகளுக்கு படியளக்க, பக்தர்கள் ரோட்டின் இருபுறமும் அரிசியை தூவியும், அதை எடுத்தும் வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar