பதிவு செய்த நாள்
29
டிச
2018
05:12
தர்மபுரி: தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில், இந்தாண்டின் கடைசி தேய்பிறை அஷ்டமி விழா நடைபெற்றது.
பழமைவாய்ந்த, பிரசித்தி பெற்ற இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில், தேய்பிறை அஷ்டமி விழா சிறப்பு வாய்ந்தது. இந்தாண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை, மாதத்திற்கு ஒரு தேய்பிறை அஷ்டமி என, 12 நாட்கள் இவ்விழா உள்ளது. இதில், 11 விழாக்கள் முடிந்த நிலையில், இந்தாண்டின் கடைசி தேய் பிறை அஷ்டமி விழா, இன்று(டிச.,29ல்) நடைபெற்றது. காலை, 10:00 மணிக்கு மூலவருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பொருட்களால், சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் வைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.