பதிவு செய்த நாள்
29
டிச
2018
01:12
படப்பை: படப்பையில் அமைந்துள்ள, பழமையான, திருவீரட்டீஸ்வரர் கோவில், பழமை மாறாமல் புனரமைக்கும் பணி நடைபெறுகிறது.குன்றத்துார் ஒன்றியம், படப்பையில், 1,000 ஆண்டுகள் பழமையான, சாந்தநாயகி சமேத திருவீரட்டீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, அகோர வீரபத்திரர், காளத்தீஸ்வரர், சனீஸ்வரர், சுப்பிரமணியருக்கு தனி சன்னிதிகள் உள்ளன.சித்திரை மாத சதயம் நட்சத்திரத்தில், திருநாவுக்கரசர் குருபூஜை விழா, ஆடி மாதத்தில் சுந்தர் குருபூஜை விழா விமரிசையாக நடைபெறும்.இந்நிலையில், சிதிலமடைந்து இருந்த இந்த கோவிலை, அப்பகுதி மக்கள், நன்கொடையாளர்கள் உதவியுடன் திருப்பணி செய்து வருகின்றனர்.கோவிலின் கருவறை, அர்த்த மண்டபத்தில் இருந்த கற்கள் அகற்றப்பட்டு, பழமை மாறாமல் புதுப்பிக்கப்படுகிறது.மேலும், மூன்று நிலை கல் மண்டபம், 60 அடி உயரம் கொண்ட, ஐந்து நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.