வைகாசி விசாகத் தினத்தில் வல்லக்கோட்டை கோயிலின் கர்ப்பகிரக நுழைவாயில் சன்னிதி மற்றும் மண்டபத்தில் காய்கறிகள், கனிகள் என அத்தனை வகைகளையும் கொண்டு அலங்கரிக்கிறது யாத்திரை தோழன் குழு. மார்க்கெட்டில் கிடைக்கும் அத்தனை காய் கனி வகைகளையும் அன்றைய தினம் கொண்டுவந்து குவித்துவிடுகிறார்கள் பக்தர்கள். அவற்றை மாலையாகக் கோத்து. கோயில் முழுவதும் அலங்காரம் செய்யப்படுகிறது. இது தவிர, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நடக்கும் மகாபிஷேகமும் பார்த்திபன் தம்பதியின் உபயம்தான். 20 லிட்டர் பால், கும்பகோணத்திலிருந்து சந்தனம், வெற்றிலை, விபூதி என்று ஆத்மார்த்தமாகப் பார்த்துப் பார்த்து சேவை செய்கிறார்கள் வல்லக்கோட்டை வள்ளலுக்கு!