Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கை கொடுத்த தெய்வம் காய் - கனி அலங்காரம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கதற வைத்த காணொளி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2019
04:01

அன்றிரவு வலைதளத்தில் காணொளி ஒன்றைப் பார்த்தேன். ஆப்ரிக்காவில் ஒரு தாய். அவளுக்கு இரு பிள்ளைகள். மத்தியதரவர்க்கம். நிம்மதியான வாழ்க்கை. அத்தாயின் மூத்த மகன் ஜானுக்கு அமெரிக்கா செல்ல ஆசை. விடாமுயற்சியால் சென்று, ஓரளவு நல்லநிலைக்கும் வருகிறான். தாயைப் பார்க்க ஆசை. ஆனால் பணமில்லை. வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி ஆப்ரிக்க பயணத்திற்குக் காசு சேர்க்கிறான். பத்தாண்டுகள் ஓடி விடுகின்றன.   ஆப்ரிக்கா கிளம்பிய ஜான் தன் கிராமத்து வீட்டை அடைகிறான். வாசலில் நின்றிருந்த தம்பியை கட்டித் தழுவுகிறான்.  உள்ளிருந்து “ஜான்”  குரல் கேட்கிறது. அம்மா என அலறியபடி  ஓடுகிறான். “வந்துவிட்டாயா மகனே?’ என்பது போல் கைகளை விரித்தபடி நிற்கிறாள் தாய். கண்ணீர் கொட்டுகிறது. கதறுகிறான் ஜான். மகனை அணைத்துக் கொள்கிறாள் அவள்.

“மன்னியுங்கள் அம்மா...”

“அம்மாவிடம் எதற்கப்பா மன்னிப்பு எல்லாம்?” என்று சொல்லி மீண்டும் அணைக்கிறாள். ஜான் இன்னும் அதிகமாக அழுகிறான்.  இந்த காணொளி பற்றி யாரிடம் சொல்வது என எண்ணியபடி மனம் போன போக்கில் நடந்தேன்.  

“ஹெல்ப் பண்ண முடியுமா?” குரல் கேட்டு நின்றேன்.
50 வயது பணக்காரப் பெண் ஒருத்தி பச்சைப்புடவை உடுத்தியபடி நின்றிருந்தாள். அருகில் பெரிய கார் ஒன்றும் இருந்தது.  

பச்சை. என்னைக் கொத்தடிமையாகக் கொண்டவள்  ஐயம் தீர்க்க வந்து விட்டாள் என்பதைக் கட்டியம் கூறும் சின்னம். நடுத்தெரு என்றும் பார்க்காமல் அவளது காலடியில் விழுந்தேன்.

“அந்தக் காணொளி உன்னைக் கலங்கடித்துவிட்டது. அப்படித் தானே?”

“ஆம் தாயே.”

“தாய் – மகன் என்ற சாதாரண கதையை அதில் சொல்லவில்லை. மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரின் ஆன்மிக வரலாறைச் சொல்கிறது. மனதில் கொஞ்சம் ஆன்மிக நாட்டம் இருந்தால் கூட அந்தக் கதை  கலங்கடித்துவிடும்.”

“ சற்று புரியும்படி சொல்லுங்கள் தாயே”

“ காலம் என்ற ஒன்றை நான் படைப்பதற்கு முன்னால் நாம் அனைவரும் ஒன்றாக இருந்தோம்.”

“புரிகிறது தாயே. அந்தக் கட்டத்தில் நீங்கள் மட்டும் தான் இருந்தீர்கள். அதாவது சக்தி மட்டுமே இருந்தது. நாங்கள் உங்களுக்குள் இருந்தோம்.”

“சரியாகப் புரிந்துகொண்டாய். அந்த ஆப்ரிக்கத் தாயும் அவளது இரு மகன்களும் ஒரே வீட்டில் வசித்தது போல நாமெல்லாம் என்னுள் இருந்தோம்.”

என்ன அழகான வார்த்தைப் பிரயோகம். நான் மட்டுமே இருந்தேன்; நீங்கள் யாரும் இல்லை எனச் சொல்லாமல் நாமெல்லாம் என்னுள் இருந்தோம் எனச் சொல்கிறாளே!

“ஆப்ரிக்கத் தாயின் மூத்த மகனுக்கு அமெரிக்கா போக ஆசை வந்தது போல உங்களில் சிலருக்கு உலக வாழ்வை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது.”

“அந்த ஆசை எப்படி வரும்? அதுவும் தாய் வேறு, தான் வேறு என்றில்லாத  உன்னத நிலையில் விலகிச் செல்ல எப்படி மனம் வரும்?”

“ஆசை ஏன் வந்தது என்பதைப் பிரிந்து வந்த நிலையில் அறிய முடியாது. காலம் தொடங்குவதற்கு முந்திய நிலைக்குச் சென்றால் மட்டுமே அதன் ஊற்றுக்கண் புலப்படும்.”

சரி தாயே! மேலே சொல்லுங்கள்.

“ஜான் அமெரிக்கா சென்றதும் தாயை மறந்தான். அதே போல் உலகில் பிறந்தவர்கள் என்னை மறந்தனர். இந்த உலக வாழ்வு நிலையானது என நினைத்தனர். பிறப்பு, பிணி, மூப்பு, இறப்பு என்ற சம்சாரச் சக்கரத்துள் சிக்கிக் கொண்டனர்.”

“மீண்டும்  எப்படி உங்களுடன் இணைவது? காலம் தொடங்கும் முன்பு இருந்த நிலை மீண்டும் வராதா?”

“நிச்சயம் வரும். ஜான் வாழ்க்கையை ஒரு பாடமாக  கொள். முதலில் அமெரிக்க வாழ்வில் மனம் பறிகொடுத்தான். தாய் இருப்பதை மறந்தான். ஆனால் நாள் செல்லச் செல்ல தாயன்பை நினைத்து ஏங்க ஆரம்பித்தான். ஆனால்  அவனிடம் பணமில்லை. தாயைப் பார்த்தே தீருவது என்ற முனைப்பு வந்தவுடன் அதற்காகப் பணம் சேர்க்க ஆரம்பித்தான். அதே போல்...”

“புரிகிறது தாயே! உங்களுடன் மீண்டும் நாங்கள் இணைய வேண்டுமென்றால் புண்ணியத்தைச் சேர்க்கவேண்டும்.”

“ஆனால் புண்ணியம் செய்கிறேன் என்று அடுத்தவர் மனதைப் புண்படுத்தினால் அது கணக்கில் சேராது. ஒரு செயல் பாவமா புண்ணியமா என்பது  செயலைப் பொறுத்ததல்ல. செயலின் நோக்கம், அதைச் செய்பவரின் மனநிலையைப் பொறுத்தது.   
புண்ணியக் கணக்கு பார்க்காதே. அன்பைச் சேகரி. அனைவரிடமும் அன்புடன் இரு. உன்னைக் கொல்ல வரும் புலியிடமும், கொத்த வரும் பாம்பிடமும் அன்பு காட்டும் மனம் வந்துவிட்டால்...”

“வந்து விட்டால். .”

“அந்த ஆப்ரிக்கத் தாய் போல் நான் காத்துக்கொண்டிருப்பேன்.”
அன்னையின் அரவணைப்பை நினைத்து ஏங்க ஆரம்பித்தது மனம். இப்போதே வாழ்வை முடித்துக்கொண்டு அவளிடம் ஒன்றினால் என்ன?  வாழ்வின் இலக்கு இவள் என்று தெரிந்தபின் ஏன் சம்சார சாகரத்தில் உழல வேண்டும்?என் எண்ணத்தை புரிந்தவளாக பேசினாள்.

“மற்றவர்கள் எக்கேடோ கெட்டுப் போகட்டும். நான் மட்டும் உங்களுடன் ஒன்றி விடுகிறேன் என்ற நினைப்பு வந்துவிட்டது. இது  சுயநலம்.”

உலக வாழ்வு வேண்டாம். உமையவளின் திருவடிகளே போதும் என நினைப்பது எப்படி சுயநலமாகும்?

“அங்கே தெரியும் காட்சியைப் பார்.”

இமயமலைச் சாரலில் ஒரு ஆசிரமம். அங்கே ஒரு இளம்துறவி சீடர்களுக்கு உபதேசித்துக் கொண்டிருந்தார்.  அவரது முகம் ஞானத்தால் பிரகாசித்தது.

“அவருக்கு என்ன வயதிருக்கும் என நினைக்கிறாய்?”

“25.”

“இல்லை. அவர் மூவாயிரம் ஆண்டுகளாக வாழ்கிறார்.”

ஆடிப்போனேன்.

“இதற்கே இப்படியா... இப்போது நடக்கும் உரையாடலைக் கவனி.”

அவர் முன் அன்னை உருவெளிப்பாடாகத் தோன்றியதைப் பார்த்தேன்.

“குழந்தாய் உனக்காகக் காத்திருக்கிறேன். என்னோடு கலந்துவிடு.”

“தாயே! இன்னும் எத்தனையோ பேர் அறியாமையில் உழல்கிறார்கள். அவர்களுக்கு வழிகாட்டி விட்டு வருகிறேனம்மா.”

“ என்னிடம் எப்போதடா வருவாய்?”

“பூமியில் கடைசி உயிரினமும் உங்களின் அன்பை உணர்ந்ததும் நான் வருகிறேன்.”

“அதற்கு இன்னும் கல்பகோடி காலம் ஆகுமே?”

“உங்களுக்கு ஒரு கோடி யுகங்களும், ஒரு நொடியும் ஒன்று தானே தாயே!”

“இவர்கள் பாவக் கணக்கு தீர வேண்டுமே?”

“தாயே, இவர்களின் பாவங்களை நான் ஏற்கிறேன். இவர்களுக்காக நான் நரகம் போகிறேன். சம்சார வாழ்வில் இருந்து விடுவியுங்கள் தாயே!”

என்னிடமிருந்து ஒரு விம்மல் வெடித்தது. இங்கிருந்து தப்பினால் போதும் என எண்ணும் நான் எங்கே? அன்னையே அழைத்தும் அடுத்தவர் துன்பங்களைக் களைந்த பின் வருவதாகச் சொல்லும் துறவி எங்கே? இந்த மனநிலை வர எத்தனை கோடி பிறவிகள் வேண்டுமோ?

“இப்போது  ஒரு கேள்வி. அந்த துறவி எப்போது என்னைச் சேருவார் எனச் சொல்.”

“நீங்களே சொன்னீர்களே தாயே! கல்பகோடி காலம் என்று.”

“ முட்டாள். அவரது அன்பை உணர்த்தச் சொன்னது அது. என்னிடமிருந்து அவர் பிரியவேயில்லை. இன்றும் என்னுள் நானாக இருக்கிறார்.
எல்லோரும் உய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர் ஏற்கனவே இறைநிலையில் தான் உள்னனர். சரி இப்போது சொல் உனக்கு என்ன வேண்டும் சொல்?”

“ஏதும் வேண்டாம். அவரைப் போல் ஞானியாக என்னைப் படைத்தால் அப்படி இருக்கிறேன். இல்லை அறியாமையில் உழலும் அரக்கனாகப் படைத்தால் உங்கள் கையால் மடிகிறேன். புழுவாகப் படைத்தால் உங்கள் கோயிலை நாடிவரும் அடியவர் காலில் பட்டு நசுங்கி மடிகிறேன். என்றென்றும் உங்கள் கொத்தடிமையாவதை தவிர வேறு எதையும் நாடாத மனதை கொடுங்கள் தாயே”

மனம் தாளாமல் அழுதேன். அவள் சிரித்தபடி காற்றோடு கலந்தாள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar