பதிவு செய்த நாள்
04
ஜன
2019
12:01
திருச்சி: ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, கல்லுக்குழி ஆஞ்சநேயர் சுவாமிக்கு, வடை மாலை தயாரிக்கும் பணி முழு வீச்சில் துவங்கியுள்ளது.
பிரசித்தி பெற்ற கல்லுக்குழி ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் ஆண்டு தோறும், மார்கழி அமாவாசையில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு விழா, நாளை கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு அலங்காரம் செய்வதற்காக லட்சத்தி எட்டு வடை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்த வருகிறது. ஆஞ்சநேயர் ஜெயந்தியன்று, சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்த பின், வடை மாலை சாற்றி, சிறப்பு வழிபாடு செய்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வடை வழங்கப்படும்.