திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோயிலில், நடைபெற்ற பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்தி பெருமானுக்கு பால், சந்தனம் அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பிரதோஷத்தை முன்னிட்டு தங்க ரிஷ்ப வாகனத்தில் உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் உள்பிராஹம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.