பதிவு செய்த நாள்
04
ஜன
2019
12:01
ஷீரடி: மஹாராஷ்டிர மாநிலம், ஷீரடியில் உள்ள, பிரசித்தி பெற்ற, சாயிபாபா கோவிலுக்கு, 1 நாட்களில், 14 கோடி ரூபாய்க்கும் அதிகமான காணிக்கை வசூலாகியுள்ளது. மஹாராஷ்டிராவில் அஹமத்நகர் மாவட்டம், ஷீரடியில் உள்ள, சாயிபாப கோவிலுக்கு, உலகம் முழுவதிலும் இருந்து வரும் பக்தர்கள், அதிகளவில் காணிக்கை செலுத்துவர்.டிச.,22 முதல், ஜன., 1 வரை, சாயிபாபா கோவிலுக்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, 9.5 லட்சம் பக்தர்கள் வந்தனர். அவர்கள் அளித்த காணிக்கை மூலம், 14.54 கோடி ரூபாய் வசூலானது. இதுகுறித்து, கோவில் அறக்கட்டளை துணை தலைவர் சந்திரசேகர் கதம் கூறியதாவது:பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களின் மதிப்பு, 19 லட்சம் ரூபாய். அமெரிக்கா, பிரிட்டன், மலேஷியா, சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் சீன நாட்டு பக்தர்கள், 30.63 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை காணிக்கையாக செலுத்தினர். ஒட்டு மொத்தமாக, 14.54 கோடி ரூபாய் வசூலானது.இவ்வாறு அவர் கூறினார்.