புதுச்சேரி: தட்டாஞ்சாவடி கம்பளி ஞானதேசிக சுவாமியின் 145வது குரு பூஜை மற்றும் யோகமகரிஷி கீதானந்தகிரி குருமகாராஜின் 25வது குரு பூஜை விழா நடந்தது.மடாதிபதி ஆனந்த பாலயோகி பவனானி முன்னிலை வகித்தார். மீனாட்சிதேவி பவனானி விழாவை துவக்கி வைத்தார்.யோகாஞ்சலி நாட்டியாலயாவின் கர்நாடகா வாய்ப்பாட்டுடன் கூடிய பஜனைகள், கீர்த்தனைகள் நடந்தது.அதனை தொடர்ந்து அபிஷேக ஆராதனை நடந்தது. கலைமாமணி மணிகண்ணன், புலவர் பட்டாபிராமன், ஜெகதீசன், ஓதுவார் சதாசிவம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.குரு பூஜையையொட்டி படையலுடன் மடத்தினை வலம் வந்து மகா தீபாராதனை நடந்தது. சமபந்தி விருந்து நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை யோகாஞ்சலி நாட்டியாலயா பொதுமேலாளர் சண்முகம், கஜேந்திரன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.