கடலுார்: திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் பாவை விழாவையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் பாவை விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கு திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல், பன்னோடுபாடுதல் மற்றும் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது.வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவிற்கு, திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி தலைமை தாங்கினார். கூத்தப்பாக்கம் வளவதுரையன் முன்னிலை வகித்தார். திருவந்திபுரம் கோவில் செயல் அலுவலர் ராஜசரணவகுமார் வரவேற்றார்.திருவக்கரை சந்திரமவுலீஸ்வர் கோவில் முன்னாள் செயல் அலுவலர் நாகராஜன் சிறப்புரையாற்றினார். அரிஸ்டோ பப்ளிக் பள்ளி தலைவர் சிவக்குமார் பரிசு வழங்கினார். திருப்பாதிரிப்புலியூர் சப் இன்ஸ்பெக்டர் கதிரவன், ராமையா, ரமேஷ், நரசிம்மன், இந்து அறநிலையத்துறை ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.