பதிவு செய்த நாள்
16
ஜன
2019
01:01
காங்கேயம்: காங்கேயம் அடுத்த, சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த சிவன்மலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. தைப்பூச தேர்த்திருவிழா, மலையடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில், 12ம் தேதி துவங்கியது. நேற்று காலை, 6:00 மணிக்கு வீரகாளியம்மன் மலைக்கோவிலுக்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.மயில் வாகன புறப்பாடு, விநாயகர் வழிபாடு, 11:00 மணியளவில் நடந்தது. 12:02 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில், பக்தர்களின், அரோகரா கோஷத்துடன் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, பக்தர்கள் விரதம் மேற்கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான, தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி வரும், 21ம் தேதி காலை, 6:00 மணிக்கு துவங்குகிறது. 22ல், தேர், மலையில் வலம் கொண்டு வரப்பட்டு ஓரிடத்தில் நிறுத்தப்படும். 23ல் திருத்தேர் நிலை அடைகிறது. பக்தர்கள் காவடி எடுத்து வந்து, நேர்த்திக்கடன் செலுத்துவர்.