Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
கும்பமேளாவில் நீராடிய திருநங்கையர் கும்பமேளாவில் நீராடிய திருநங்கையர் திருப்பரங்குன்றம் கோயிலில் தெப்பத்திருவிழா திருப்பரங்குன்றம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலையில் ஆல்கொண்டமால் திருவிழா: சுவாமிக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2019
17:43

உடுமலை: கால்நடைகளின் நலன்வேண்டி, உடுமலை ஆல் கொண்டமால் கோவில் திருவிழாவில் பக்தர்கள் வழங்கிய பாலை கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்.

உடுமலை, சோமவார பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா, உழவர் திருநாள் பூஜையுடன் நேற்று (ஜன., 16ல்)துவங்கியது. முக்கிய நிகழ்வான உருவார சிறப்பு பூஜை இன்று (ஜன., 17ல்) நடைபெற்றது. உடுமலை அருகேயுள்ள, சோமவாரபட்டியில், பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவிலில், தைப்பொங்கல் தமிழர் திருநாள் ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. கால்நடைகளை காக்கும் தெய்வமான ஆல்கொண்டமால் கோவிலுக்கு, சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, ஏராளமான விவசாயிகள், மாட்டுப்பொங்கல் முதல் மூன்று நாட்கள் வருகின்றனர். பாரம்பரிய வழிபாடுகால்நடை செல்வங்கள் செழிக்கவும், கால்நடைகளை நோய், நொடிகள் அண்டாமல் பாதுகாக்கவும், வேளாண் வளம் சிறக்கவும் விவசாயிகள், ஆல்கொண்ட மாலுக்கு, பால் கொண்டு வந்து அபிஷேகம் செய்து வழிபடுவதையும், பாரம்பரிய வழிபாட்டு முறையாக கொண்டுள்ளனர். விழாவில் பக்தர்கள் வழங்கிய பாலை கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்.

உடுமலை, பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, ஏராளமான விவசாயிகள் இன்று (ஜன., 17ல்) ஆல்கொண்டமாலை வழிபட வருவதால், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. களைகட்டிய வளாகம் நேர்த்திக்கடன் செலுத்தும் உருவாரங்கள் விற்பனை கடைகள், தேங்காய், பழம், பூக்கடைகள், உணவு பண்டங்கள், மாடுகளுக்கு தேவையான கயிறுகள், உழவுக்குத்தேவையான உபகரணங்கள் விற்கும் கடைகள் நூற்றுக்கணக்கில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ராட்டிணங்கள், சிறுவர் விளையாட்டுக்கருவிகள் என பொழுது போக்கு அம்சங்கள், தை பொங்கலுக்கே உரித்தான கரும்பு விற்பனைக்கடைகள் என சுற்றிலும், பல ஏக்கர் பரப்பளவில் கடைகளாக காணப்படுகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவில் உற்சவம், யானைகள் ஓட்டத்துடன் துவங்கின. தெற்கு கோபுர வாசல்கேரள ... மேலும்
 
temple
புதுக்கோட்டை: புதுக்கோட்டை பெருமாள் கோவிலில், தீபம் ஏற்ற, கல்தூணால் ஆன நிரந்தர விளக்கு ... மேலும்
 
temple
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் ராமாயண வரலாறு குறித்த மின்னொளி காட்சிகளை பயணிகள் ... மேலும்
 
temple
சிவகங்கை : திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் நாளை (பிப்.19) நடக்கும் மாசி தெப்ப ... மேலும்
 
temple
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.