பதிவு செய்த நாள்
18
ஜன
2019
02:01
நல்லம்பள்ளி: பொங்கல் பண்டிகையையொட்டி, நல்லம்பள்ளி அடுத்த, ஜருகு பெரியமாரியம் மன், புள்ளகுட்டி மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று (ஜன., 17ல்) நடந்தது. விழாவில், ஆகாய காவடி, மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்து, ஊர்வலமாக கோவிலுக்கு வந்த பக்தர்கள், அம்மனை வழிபட்டனர். அலகு குத்தி, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை வரை நடந்த விழாவில், ஜருகு மட்டுமின்றி, அருகே உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, ஜருகு பெரியமாரியம்மன், புள்ளகுட்டி மாரியம்மன் கோவில் நிர்வாகத்தினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.