மனஉறுதிமிக்க நபிகள் நாயகத்தை கொல்ல குறைஷி என்னும் இனத்தவர் முடிவு செய்தனர். நபிகளின் பெரிய தந்தை அபூதாலிப்பிடம் குறைஷி தலைவர்கள், ”நாயகத்தை கண்டித்து வையுங்கள். அவர் தன் பிரசாரத்தை உடனடியாக நிறுத்தி விட வேண்டும். அவருக்கு மண் வேண்டுமானால், அவரை இந்நாட்டின் மன்னராக்குகிறோம். பெண் வேண்டுமானால், ஒரு பேரழகியைத் திருமணம் செய்து வைக்கிறோம். நாட்டின் பெரிய பணக்காரர்களில் ஒருவராக்குகிறோம். ஆனால் எங்களை மீறி பிரசாரம் செய்தால், உயிரை எடுத்து விடுவோம்,” என மிரட்டல் விடுத்தனர். ஆனால், நாயகம் ஆசைக்கு மயங்கவில்லை, மிரட்டலுக்கும் பயப்படவுமில்லை. தொடர்ந்து தன் பணியை மேற்கொண்டார். ஆசை வார்த்தைக்கு மயங்கக் கூடாது. திடமான உள்ளத்தோடு நம் பணியில் ஈடுபட வேண்டும்.