“ஒருவன் பக்கத்து வீட்டாருடன் எப்படி நடக்க வேண்டும்? அவர்கள் தவறு செய்தால் மன்னிக்கலாமா?” என இயேசுவிடம் கேட்டார் சீடர் பேதுரு. “ஒருமுறையல்ல.... எழுபது முறை கூட மன்னிக்கலாம்” என நடந்த சம்பவம் ஒன்றைச் சொன்னார். அரசர் ஒருவர் ஏழைப்பிரஜை ஒருவருக்கு பத்தாயிரம் வெள்ளிப்பணம் கடனாக கொடுத்தார். அதை அவரால் தர முடியாததால் சொத்தை ஜப்தி செய்தார். அப்போதும் கடன் அடைபடவில்லை. எனவே அவரது மனைவி, மக்களை அடிமையாக்கினார். “தயவு செய்து குடும்பத்தினரை விட்டுவிடுங்கள், வாழ்நாள் முழுவதும் கடனுக்காக உழைக்கிறேன்,” என்றான் ஏழை. இரக்கப்பட்ட அரசர் கடனைத் தள்ளுபடி செய்தார். அந்த ஏழை இன்னொருவனிடம் நூறு வெள்ளிப்பணம் கடன் வாங்கியிருந்தான். அதையும் திருப்பி தரமுடியாததால் ஏழையைக் கொல்ல முயற்சித்தான் அவன். இதையறிந்த அரசர் பணியாட்களை அனுப்பிக் கடன் கொடுத்தவனைக் கைது செய்தான். “நான் பெரும் பணம் கடனாகக் கொடுத்திருந்தேன். வறுமையால் திருப்பித்தர விட்டாலும், கடனைத் தள்ளுபடி செய்தேன். நீயோ சிறுதொகைக்காக கொல்லத் துணிந்ததால் குற்றவாளியாகி விட்டாய். இரக்கமில்லாத உன்னை சிறையில் அடைக்கிறேன்” என்றும் ஆணையிட்டார். சந்தர்ப்ப சூழலால் தவறு செய்பவர்களை மன்னிக்கும் மனம் வேண்டும். இல்லாவிட்டால் துன்பம் வந்து விடும்