பதிவு செய்த நாள்
30
ஜன
2019
03:01
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில், மாசி மாத பிரம்மோற்சவம், பிப்., 10ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.அம்மனின் சக்தி பீடங்களில், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில், காமகோடி சக்தி பீடமாக விளங்குகிறது.இக்கோவிலில், ஆண்டு தோறும் மாசி மாதம் பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் துவங்கி, 11 நாட்கள் நடைபெறும். அதன்படி, இந்தாண்டு பிரம்மோற்சவம், பிப்., 10ல், காலை, 6:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.