பதிவு செய்த நாள்
04
பிப்
2019
01:02
திருத்தணி: சிவானந்த சுவாமி கோவிலில் நடந்த ஆண்டு விழாவில், திரளான பக்தர்கள் வழிபட் டனர்.திருத்தணி அடுத்த, கார்த்திகேயபுரத்தில் உள்ள, சிவானந்த சுவாமி கோவிலில், நேற்று முன்தினம் (பிப்., 2ல்), 55ம் ஆண்டு விழா சிறப்பு ஜபத்துடன் துவங்கியது.நேற்று (பிப்., 3ல்), காலை, 6:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஜபம் நடந்தன. காலை, 7:00 மணி முதல், 8:00 மணி வரை, சித்த வித்தியார்த்திகள் சிறப்பு ஜபம் நடத்தினர்.அதை தொடர்ந்து, ஆன்மிக சிறப்பு சொற்பொழிவுகள் மாலை வரை நடந்தது. நிகழ்ச்சியில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.