கிள்ளை:கிள்ளை அருகே பின்னத்தூர், தில்லைவிடங்கன், பெரியக்காரைமேடு உள்ளிட்ட சிவன் கோவில்களில்சனி பிரதோஷ வழி பாடு நடந்தது.கிள்ளை அடுத்த பின்னத்தூர் பர்வதவர்த்தினி சமேத ராமநாதேஸ்வரர் மற்றும் மத்பாம்பன் சுவாமிகள் கோவில், தில்லைவிடங்கன் பர்வதம்பாள் உடனுறை விடங்கேஸ்வரர் கோவில்களில்,சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடந்தது.இதேபோல், பெரியக்காரைமேடு கொடிப்பள்ளம் மற்றும் கிள்ளை நாடார் நகர் பகுதியில் உள்ள சிவன்கோவில்களில் சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது.