மங்கலம்பேட்டை:மங்கலம்பேட்டை மாத்ருபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு நேற்று முன்தினம், மஹா சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது.காலை 7:00 மணிக்கு மாத்ருபுரீஸ்வர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, காலை 1:30 மணிக்குபால், சந்தனம், தயிர், தேன்,இளநீர், பஞ்சாமிர்தம், திரவியப் பொடிஉள்ளிட்ட திரவியங்களால் நந்தி பகவானுக்கு அபிஷேகம் நடந்தது.மாலை 5:00 மணியளவில் சந்தன காப்பு அலங்கரத்தில் நந்தி பகவான் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.