புதுச்சத்திரம் முனியனார் கோவிலில் லட்சதீப திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2019 04:02
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை முனியனார் கோவிலில் 73வது ஆண்டு லட்சதீப திருவிழா நடந்தது.புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளை முனியனார் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை, லட்சதீபதிருவிழா நடப்பது வழக்கம். 73வது ஆண்டு லட்சதீப திருவிழா ௮ம் தேதி நடந்தது.
அதனையொட்டி அன்று காலை 10.00 மணிக்கு முனியனார், நல்லநாயகி, பொன்னியம்மன், விநாயகர், ஐயனார் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து மாலை 6.00 மணிக்கு முக்கிய வீதிகள் வழியாக அலங்காரகாவடி புறப்பாடு செய்து, 6.30 மணிக்கு லட்சதீப திருவிழா நடந்தது.சுற்று பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளைகோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்தனர்.