கண்டாச்சிபுரம் அடுத்த ஒதியத்தூர் பிடாரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12பிப் 2019 03:02
கண்டாச்சிபுரம்:கண்டாச்சிபுரம் அடுத்த ஒதியத்தூர் பிடாரி அம்மன் கோவிலில் நேற்று (பிப்., 11ல்) காலை கும்பாபிஷேகம் நடந்தது.
கண்டாச்சிபுரம் அடுத்த ஒதியத்தூர் ஏரிக்கரையில் உள்ள பூரணி புஷ்கலை, பிடாரி அம்மன், அய்யனார் கோவில்களில் நேற்று (பிப்., 11ல்)காலை கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக காலை 6:00 மணிக்கு இரண்டாம் காலை பூஜையும், பூர்ணாஹூதி யாகமும் நடந்தது.தொடர்ந்து 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி பூரணி புஷ்கலை, பிடாரி அம்மன், அய்யனார் கோவில் கோபுரங்களுக்கும், மூலவர்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.ஏற்பாடுகளை ஒதியத்தூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.