கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சாந்தரசம்: மாங்காட்டில் தவக் கோலத்தில் இருக்கும் காமாட்சியின் வதனத்தில் இருப்பது இந்த ரசம்தான்.கருணை ரசம்: கிட்டத்தட்ட எல்லா கோயில்களிலுமே அம்பாள் கருணை ரசத்துடன்தான் வீற்றிருக்கிறாள்.ஆனந்தரசம்: ஈசன், ஆனை முகன், ஆறுமுகத்தானுடன் தாய்மைப் பொங்க அமர்ந்திருக்கையில் அம்மையின் முகத்தில் ஜொலிப்பது ஆனந்த ரசம்.ரவுத்திரம்: மகிஷனை வதம் செய்துவிட்டு, மகிஷாசுர மர்த்தினியாக திகழும்போது அவள் திருமுகத்தில் ஜொலிப்பது ரவுத்திர ரசம்.பயானகம் (அச்சம்): சிவனை அம்பாள், கயிலாயத்தில் கைப்பிடிக்கும் நேரத்தில் அவரைச் சுற்றியிருந்த பாம்பைக் கண்டு பயந்தபோதும், ராவணன் கயிலாயத்தைத் தூக்க முயலும்போது, சிவபெருமான் கால்விரலால் ராவணனின் கர்வத்தை அடக்கும்போது அம்பாளிடம் வெளிப்பட்டதும் அச்ச ரசம்.பீபட்சம் (வெறுப்பு): கஜாசுரனை வதம் செய்துவிட்டு, ரத்தம் தோய்ந்த அவன் தோலையெடுத்து தன் மேல் போர்த்திக் கொண்ட - தன்னில் பாதியைப் (அம்சத்தை) பார்க்கையில் உமையின் விழிகளில் தெறித்தது வெறுப்பு ரசம்.ஹாஸ்யம்: விஷ்ணு எடுத்த மோகினி ரூபத்தின் மேல் காதல் கொண்ட கணவனைப் பார்த்து அம்பாள் நகைக்கையில், அது ஹாஸ்ய ரசம்.ஆச்சர்யம்: திரிபுர அசுரர்களை தனியொருவனாக வதம் செய்த பெருமானை நோக்கும்போது, அம்பாளில் முகத்தில் வழிவது ஆச்சர்ய ரசம்.சிருங்காரம்: பூலோகத்தில் பிறந்து, தவமிருந்து, சிவனைக் கரம்பிடிக்கும் போதெல்லாம் ஏற்படும் அம்பாளின் நாணுதல் நிலை, சிருங்கார ரசம்.