திருக்காஞ்சியில் கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2019 02:02
வில்லியனூர்: திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் நடந்த ராகு கேது பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.வில்லியனூர் அருகே உள்ள திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோவிலில் நேற்று (பிப்., 13ல்) காலை 11:30 மணியளவில் அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் ராகு கேது பரிகார யாகம் துவங்கியது. பகல் 1:00 மணியளவில் பரிகார உபயதாரர்களுக்கு சங்கல்பமும், தொடர்ந்து பூர்ணாஹீதி, சிறப்பு அபிஷேகம் நடந்தது.மதியம் 2:02 மணியளவில் ராகு பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், கேது பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும் பிரவேசித்தார். அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.அதேபோன்று வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலும் ராகு கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது.